நடுக்கடலில், கவிழ்ந்த படகின் மேல் தனி ஆளாக ஒரு இளைஞர் அமர்ந்து இருந்த சம்பவம் உலகம் முழுவதும் அனைவரது மனதை உலுக்கியுள்ளது.
கொலம்பியாவைச் சேர்ந்த இளைஞர் ஜுவான் ஸ்டீபன் மோண்டோயா (22). இவர் பயணம் உலக மக்களை ஆச்சரியத்தில் மூழ்கடித்துள்ளது. அதன்படி, நடுக்கடலில் விபத்துக்குள்ளான படகின் மேல் அமர்ந்து பல மணி நேரம் பயணித்து வந்துள்ளார் ஜூவான்.
கடந்த 25-ம் தேதி அமெரிக்க கடற்படையால் மீட்கப்பட்டேபாது அவரது உடலில் இருந்த நீர்ச்சத்து குறைந்ததால் மிகவும் சோர்வாகக் காணப்பட்டார். பின்னர், ஜுவானுக்கு அமெரிக்க கடற்படை தண்ணீரும் உணவும் அளித்தனர்.
இதனைத்தொடர்ந்து, ஜுவான் உட்பட 40 பேர் அமெரிக்காவுக்கு கடல்வழியாக பயணம் மேற்கொண்டனர். இதில் பயணம் செய்த படகு அட்லாண்டிக் கடலில் விபத்துக்குள்ளானது.
இந்த நிலையில், படகில் பயணித்த 40 பேரில் ஜுவான் ஸ்டீபன் மோண்டோயா மட்டுமே மீண்டு வந்துள்ளார். படகில் பயணித்தவர்கள் எவரும் கவசம் அணியாதது சோகத்தை தருகிறது.
இந்த விபத்தில் ஜுவானின் தங்கை உட்பட அனைவரும் கடலில் மாயமாகினர். மோசமான வானிலை காரணமாக படகு விபத்துக்குள்ளாகிருப்பதும், இதுவரை 5 பேரின் உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளதாகவும் அமெரிக்க கடற்படை தெரிவித்துள்ளது.
ஆள்கடத்தல் கும்பல் இந்தப் படகில் பயணித்திருக்கலாம் என்றும் அமெரிக்க கடற்படை சந்தேகிக்கிறது.
யாழில் 70 வயதில் நபர் ஒருவர் முதுநிலை பட்டம் பெற்று சாத
ஆயிரம் என்ற சொல்லை பயன்படுத்துவதற்கு பதிலாக ஆங்கிலத
இலங்கைக்கு வருகை தந்துள்ள தென்னிந்தியாவின் பிரப
பாகிஸ்தானில் நடைபெற்ற குத்துச்சண்டையில் தங்கம் வென்
பொதுவாகவே மாயாஜாலம் என்றால் அனைவருக்கும் பிடிக்கும்,
பீர் (Beer) உலகின் பழமைவாய்ந்த மிக அதிகமாக உட்கொள்ளப்படும
இலங்கைக்கான புதிய அமெரிக்க தூதுவர் ஜுலி ஜே.சன்ங் (Julie J.Sung)
இலங்கையர்களை இலக்கு வைத்து முன்னெடுக்கப்படும் விசா ம
இந்தியாவின் இஸ்ரேல் துாதுவர் நயோர் கிலான் (Naor-Gilon) இலங்கை
கடந்த ஒரு வருடத்தில் இலங்கைக்கு அதிகளவான சுற்றுலாப் ப
விண்வெளியில் ‘இறந்த’ நட்சத்திரத்தின் கடைசித் தருண
தற்போது இலங்கை வந்துள்ள ஐக்கிய இராச்சியத்தின் மிஸ் எவ
மும்பையைச் சேர்ந்த மாற்றுத்திறனாளியான சிறுமி ஒருவர்
வியாழன் கோள் மேற்பரப்பின் புதிய புகைப்படங்களை நாசா வெ
8.6 கோடி ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த பள்ளி பேருந்து அளவுள
