பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகரவுக்கு (Sarath Weerasekara) எதிராக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிடம் (Gotabaya Rajapaksa) மிகவும் பாரதூரமான குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகளுக்கு இடமாற்றத்தை பெற்றுக்கொடுக்க மூன்று முதல் ஆறு லட்சம் ரூபாய் வரை லஞ்சமாக பெற்றமை சம்பந்தமாகவே இந்த குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
கொஸ்கமை பொலிஸ் நிலைய முன்னாள் பொறுப்பதிகாரியை அவிசாவளை தலைமையக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியாக மாற்றியமையை உதாரணமாக காட்டியுள்ளதுடன் இப்படியான பல சம்பவங்கள் நடந்துள்ளதாகவும் ஜனாதிபதியிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலைமை தொடர்ந்தும் நீடித்தால், தன்னால், பொலிஸ் துறையில் ஒழுக்கத்தை பாதுகாப்பது சிரமம் என பொலிஸ் மா அதிபர் ஜனாதிபதிக்கு அறிவித்துள்ளார்.
அமைச்சர் சரத் வீரசேகர கோவிட் தொற்று காரணமாக தற்போது அங்கொடை ஐ.டி.எச் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவர் குணமடைந்த பின்னர் உடனடியாக ஜனாதிபதி இது சம்பந்தமாக முடிவு ஒன்றை எடுப்பார் என பொலிஸ் திணைக்களத்தில் பலர் எதிர்பார்த்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.
நாடாளுமன்றத்தை கலைக்கும் வகையில் விரைவில் நம்பிக்
சிறிலங்காவின்74வது தேசிய சுதந்திர தினம் கொண்டாட இன்னு
இலங்கையில் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 72 ஆயிரத்தைக
யாழ் போதனா மருத்துவமனையில் நேற்று திங்கட்கிழமை நிலவர
பா.ஜனதா மூத்த தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான சுப
இலங்கையின் 33ஆவது பொலிஸ்மா அதிபராகக் கடமையாற்றிய மஹிந
இலங்கைக்கு உரம் வழங்க ஈரான் அரசாங்கம் விருப்பம் தெரிவ
மாத்தறை - பிலதுவ பிரதேசத்தில் நேற்று கிராமத்திற்குள்
உலக நாடுகளில் இணையவழி நீதிமன்ற நடவடிக்கைகள் முன்னெடு
திருகோணமலை கடல் பிராந்தியத்தில் சிறு படகுகள் மூலம் மீ
பண்டாரவளை - எலபெத்த கும்புர தகுன கெபிலேவெல பகுதியில் ப
எந்த சூழ்நிலையிலும் கூட, நாட்டரிசி 1 கிலோ 100 ரூபாவுக்கு
பின்னவல மற்றும் மஹா ஓயா பிரதேசத்தில் சந்தேகத்திற்கிட
ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து நேற்று திங
திருகோணமலையில் மஜாஜ் நிலையம் என்ற போர்வையில் விபச்சா
