தமது மகளை வன்புணர்வுக்கு உட்படுத்தியவரை சுட்டுக்கொன்ற தந்தை!
Jan23
தமது மகளை வன்புணர்வுக்கு உட்படுத்தியவரை சுட்டுக்கொன்ற தந்தை!
தமது மகளை கடத்தி சென்று பாலியல் வன்புணர்வு செய்தவரை நீதிமன்ற வளாகத்தில் வைத்து சுட்டுக்கொலை செய்த தந்தை தொடர்பில் செய்தி வெளியாகியுள்ளது.
இந்தியாவின் பீகார் மாநிலம் முசாபர்பூரை சேர்ந்த தந்தை ஒருவரே, தமது மகளை கடத்திச்சென்றவரை நீதிமன்ற வளாகத்தில் வைத்து சுட்டுக்கொன்றுள்ளார்.
கடந்த 2020 ஆண்டு, இடம்பெற்ற இந்த கடத்தல் தொடர்பில் கைது செய்யப்பட்டவர் நீதிமன்றத்துக்கு வந்தபோதே, பாதிக்கப்பட்ட சிறுமியின் தந்தை நேற்று அவரை துப்பாக்கியால் சுட்டு கொலை செய்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவத்தை அடுத்து துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டவர், கைது செய்யப்பட்டுள்ளார்.