கொரோனா தடுப்பூசியால் ஏற்படும் அனைத்து பக்க விளைவுகளையும் பிராந்திய சுகாதார மருத்துவ அதிகாரி அல்லது சுகாதார அமைச்சிற்கு தெரிவிக்க வேண்டும் என சுகாதார அமைச்சு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
மேலும், இவ்வாறான சம்பவங்கள் குறித்து ஆராய்வதற்கு உரிய அதிகாரிகளுக்கு விரிவான அறிக்கை வழங்கப்பட வேண்டும் என சுகாதார சேவைகளின் பிரதிப் பணிப்பாளரான வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.
சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தில் நேற்று வெள்ளிக்கிழமை (21-01-2022) இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இதேவேளை, நாட்டில் இதுவரை காய்ச்சல் போன்ற லேசான பக்கவிளைவுகள் மாத்திரமே பதிவாகியுள்ளது. கடுமையான உடல்நலக் குறைபாடுகள் உள்ளவர்களுக்கு தடுப்பூசியை வழங்குவதைத் தவிர்க்குமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
எந்தவொரு தீவிரமான நோய்களுக்கும் சிகிச்சை அளிப்பதற்கு தேவையான மருத்துவப் பணியாளர்களை நியமித்துள்ளதாகவும், எனவே தடுப்பூசி போடுவது தொடர்பில் பொது மக்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை என்றும் அவர் தெரிவித்தார்.
இலங்கையில், மீண்டும் ஒரு கொரோனா அலையைத் தடுப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர் சுரேன் ராகவன் அவர்களுக்கும் மு
2020ஆம் ஆண்டில் இலங்கையின் ஊழலற்ற அதிகாரிகள் தேர்வில் ய
நாட்டின் தற்போதைய நெருக்கடிகள் தொடர்பில் எதிர்க்கட்
கியூமெடிகா அரச சார்பற்ற நிறுவனத்தினால் வவுனியா அரசாங
கண்டி மாநகர எல்லைப் பகுதியில் உள்ள மஹியாவை பகுதியின்
அண்மையில் புகையிரதத்தில் விட்டுச் செல்லப்பட்ட குழந்
பயங்கரவாதத் தடைச்சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்ளவ
மகாவலி அபிவிருத்தி அதிகார சபைக்கு எதிராக அரச தலைவர் ச
புலம்பெயர் நாடுகளில் உள்ள தமிழர்களின் முதலீடுகளை பெற
அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட பைசர் கொவிட்-19 தடுப்பூச
ஐ.நா. மனித உரிமைகள் சபையில் இலங்கைக்கு எதிராகத் தீர்மா
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில், தமது ஆதரவை இலங
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ராஜபக்ஷக்களின் ஆதரவுடன் ஆ
வெளிநாட்டு கண்காணிப்பாளர்களின் பங்குபற்றலுடன் விசேட
மட்டக்களப்பு வாழைச்சேனையில் இருந்து குருநாகலுக்கு க