உத்தரபிரதேச மாநிலம், கான்பூரைச் சேர்ந்தவர் சர்வேஷ். இவருடைய மனைவி சோனம். சோனத்திற்கு அப்பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவருடன் நட்பு ஏற்பட்டது. அந்த நட்பு நாளடைவில் காதலாக மாறியது.
இவர்கள் தனிமையில் ஒருவரையொருவர் சந்தித்து வந்தனர். இந்த விஷயம் சோனத்தின் கணவருக்கு தெரிய வந்தது. இதனால் வீட்டில் கணவனுக்கும், மனைவிக்கும் தினமும் சண்டை வந்துள்ளது.
கணவர் கேட்கும்போதெல்லாம்... அதெல்லாம் ஒண்ணும் இல்லை... நான் யாரையும் காதலிக்கவில்லை என்று கூறி வந்துள்ளார் சோனம். ஆனால், கணவர் சர்வேஷுக்கு சோனம் மீது சந்தேகம் இருந்து வந்துள்ளது. இவர்களை கையும், களவுமாக பிடிக்க யோசித்துள்ளார்.
சம்பவத்தன்று வேலைக்கு செல்வதாக சர்வேஷ் வீட்டை விட்டு வெளியே சென்றிருக்கிறார். சர்வேஷ் சென்ற பிறகு, காதலனை வீட்டிற்கு அழைத்துள்ளார் சோனம்.
சோனம் அழைத்ததும் வீட்டிற்குள் வந்துள்ளார் காதலன். இவர்கள் இருவரும் வீட்டில் உல்லாசமாக இருந்துள்ளனர். இதை சர்வேஷ் ஒளிந்திருந்து பார்த்துள்ளார். இதனையடுத்து, இவர்கள் இருவரையும் கையும் களவுமாக பிடித்தார் சர்வேஷ்.
மாட்டிக்கொண்டதால் இருவரும் அதிர்ச்சி அடைந்தனர். அப்போது, சர்வேஷை இரண்டு பேரும் சேர்ந்து அடித்து சராமரியாக தாக்கினர். தலையில் அடிபட்டதும் சர்வேஷ் மயங்கி கீழே சரிந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இதன் பின்பு இருவரும் சேர்ந்து சர்வேஷை வீட்டின் பின்பக்கத்தில் வீசி விட்டு, போலீசிடம் சோனம், தன் கணவரை யாரோ அடித்து கொன்று விட்டதாக புகார் கொடுத்தார்.
ஆனால், போலீசார் நடத்திய கிடுக்கிப்பிடி விசாரணையில் சோனம் மாட்டிக்கொண்டார். இதனையடுத்து, காதலனையும், சோனத்தையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.