கிளிநொச்சியிலிருந்து அம்பாறை - பொத்துவில் பிரதேசத்திற்கு மகிழுந்து ஒன்றில் கஞ்சா கடத்தி சென்ற எட்டரை கிலோகிராம் கேரளா கஞ்சாவுடன் இருவரைக் கைது செய்துள்ளதாக கல்முனை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவதினமான இன்று அதிகாலை 5மணியளவில் கல்முனை - நீலாவணை வீதி சோதனைச்சாவடியில் வைத்து இவர்கள் கைது செய்யப்பட்டதுடன் மகிழுந்து ஒன்றையும் கைப்பற்றியுள்ளனர்.
கல்முனையை நோக்கி பிரயாணித்த மகிழுந்து ஒன்றை நிறுத்தி இராணுவத்தினர் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
இதன்போது மகிழுந்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த எட்டரை கிலோகிராம் கேரளா கஞ்சாவை மீட்டுள்ளதுடன், இருவரைக் கைது செய்து கல்முனை பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் பொலன்னறுவை மற்றும் திருக்கோவில் பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் எனவும் இவர்கள் கிளிநொச்சியிலிருந்து பொத்துவில் பிரதேசத்திற்குக் கஞ்சாவை விற்பதற்காகக் கடத்திச் சென்றுள்ளார்கள் எனவும் பொலிஸாரிடம் ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கல்முனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
பௌத்த துறவிகளுக்கு சிறை கூடங்களை ஒதுக்கிய அரசாங்கத்த
நாட்டின் பொருளாதாரத்த
மக்களாட்சியின் பலத்தை ஜனாதிபதி விளங்கிக்கொள்ள வேண்ட
பொரளையில் அமைந்துள்ள பிரபல மலர்ச்சாலையொன்றின் உரிமை
அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்படுள்ள எந்தவொரு அபிவிருத
மன்னார், வவுனியா, கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவ
அரசியலில் பிரவேசிக்கும் திட்டம் இல்லை என இலங்கை கிரிக
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் ‘நிறைவுகாண் மரு
காரைநகரில் ஒரு கிராமத்தினை தனிமை படுத்துவதற்கு அனுமத
அத்தியாவசிய மருந்துகள் மற்றும் சத்திரசிகிச்சைகளுக்க
நேற்றைய தினத்தில் (10) மாத்திரம் இலங்கையில் கொவிசீல்ட்,
தெற்காசியாவைச் சேர்ந்த ஒருவர் பிரித்தானியாவை வழிநடத
இலங்கை பணியாளர்களுக்கு தாதியர் துறையில் ஆயிரத்துக்க
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் “சுபீட்சத்தின் நோக்க
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் 36ஆவது பொதுப் பட்டமளிப்
