நாட்டின் பல்வேறு பகுதிகள் விவசாய பணிகளின் போது பூச்சிக்கொல்லி மருந்து தெளிப்பதற்கு ட்ரோன்கள் பயன்படுத்தும் திட்டத்தை காணொலி மூலம் கொடியசைத்து பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.
விவசாயிகளுக்கு உதவும் வகையில் அறிமுகப்படுத்தப்படும் இந்த புதிய முயற்சியில் முதல் கட்டமாக 100 ட்ரோன்கள் பயன்படுத்தப்படுகின்றன. நிகழ்ச்சியில் பிரதமர் பேசியதாவது
மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் அடுத்த 2 ஆண்டுகளில் ஒரு லட்சம் விவசாய ட்ரோன்களை உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயித்துள்ளதாக என்னிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இளைஞர்களுக்கு புதிய வேலை வாய்ப்புகளும், புதிய வாய்ப்புகளும் உருவாகும்.
இந்த துறையின் வளர்ச்சியில் எந்த தடையும் இல்லை என்பதை அரசு உறுதி செய்யும். 21 ஆம் நூற்றாண்டின் நவீன விவசாய முறையில் இது ஒரு புதிய அத்தியாயம். இந்த ஆரம்பம் ட்ரோன் துறையின் வளர்ச்சியில் ஒரு மைல் கல்லாக இருக்கும்.
கொள்கைகள் சரியாக இருந்தால் நாடு எவ்வளவு உயரத்தில் பறக்க முடியும் என்பதற்கு இது ஒரு எடுத்துக்காட்டு. சில ஆண்டுகளுக்கு முன்பு வரை ட்ரோன்கள் பெரும்பாலும் பாதுகாப்புத் துறையுடன் தொடர்புடையவையாக இருந்தன.
விவசாயிகள் தங்கள் விளைபொருட்களான பழங்கள், காய்கறிகள் மற்றும் பூக்கள் போன்றவற்றை குறைந்த நேரத்தில் சந்தைகளுக்கு கொண்டு செல்ல அதிக திறன் கொண்ட இதுபோன்ற ட்ரோன்களை பயன்படுத்தி தங்கள் வருமானத்தை அதிகரிக்க முடியும். இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்தார்.
அசாம் மாநிலத்தில் பிரசார பயணம் மேற்கொண்டுள்ள உள்துறை
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 30,093 பேருக்கு
மேகதாது அணை விவகாரத்தில் தமிழ்நாடு – கர்நாடகா இடையேà® தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் புதிதாக அமைக்கப்பட௠விவசாயிகளின் போராட்டம் தொடர்பாக தவறான தகவல்களை பரப்பà தமிழ் சகோதர சகோதரிகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி இனிய à® கிளிநொச்சி - இரணைதீவு கடற்பரப்பில் கடந்த மார்ச் மாதம் à டெல்லியில் வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்த௠மேற்கு வங்காளத்தில் கடந்த ஏப்ரல், மே மாதங்களில் சட்டசà® லட்சத்தீவின் புதிய நிர்வாக அதிகாரியான பிரபுல் கோடா பட நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாவது அலையி தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று தீவிரமாகப் பரவிவரும் மியான்மரில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்ற பொதுத் கோவையில் பெண் விமானப்படை அதிகாரி பாலியல் வன்கொடுமை செ பள்ளி கல்விà
