More forecasts: 30 day weather Orlando

இந்தியா

  • All News
  • பாறை இடுக்கில் சிக்கிய வாலிபரை மீட்க விரைந்து செயல்படாத தீயணைப்பு அதிகாரிகள் இடமாற்றம்!
பாறை இடுக்கில் சிக்கிய வாலிபரை மீட்க விரைந்து செயல்படாத தீயணைப்பு அதிகாரிகள் இடமாற்றம்!
Feb 19
பாறை இடுக்கில் சிக்கிய வாலிபரை மீட்க விரைந்து செயல்படாத தீயணைப்பு அதிகாரிகள் இடமாற்றம்!

கேரளாவின் பாலக்காடு மாவட்டம் மலம்புழா பகுதியில் உள்ள குரும்பாச்சி மலைக்கு சென்ற வாலிபர் பாபு கால் இடறி விழுந்து பாறை இடுக்கில் சிக்கி கொண்டார்.



கடந்த 7-ந் தேதி பாறை இடுக்கில் சிக்கி கொண்ட பாபுவை 2 நாட்களுக்கு பிறகு ராணுவத்தினர் ஹெலிகாப்டர் உதவியுடன் மீட்டனர்.



இந்த சம்பவம் கேரளா மட்டுமின்றி நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த மீட்பு பணிக்கு மட்டும் ரூ. 75 லட்சம் செலவானதாக கூறப்பட்டது.



இதற்கிடையே 7-ந் தேதி மதியம் பாபு, பாறை இடுக்கில் சிக்கி கொண்டதும், அவரது நண்பர்கள் தீயணைப்பு படையினருக்கு தகவல் தெரிவித்து உள்ளனர். அவர்கள் அங்கு சென்று மீட்பு பணியில் ஈடுபட்டபோது இரவாகி விட்டது.



இதனால் பாபுவை உடனடியாக மீட்க முடியவில்லை. தீயணைப்பு வீரர்கள் விரைந்து செயல்பட்டிருந்தால் பாபுவை உடனடியாக மீட்டிருக்கலாம் என பொதுமக்கள் பலரும் சமூக வலைதளங்களில் கருத்து பதிவிட்டனர்.



இதுபற்றி தீயணைப்பு துறையின் உயர் அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டது. அவர்கள் சம்பவம் பற்றி விசாரணை மேற்கொண்டனர்.



இதையடுத்து பாறை இடுக்கில் சிக்கிய வாலிபர் குறித்த தகவலை உடனடியாக மாநில கட்டுப்பாட்டு அறைக்கு தெரிவிக்காதது, விரைந்து செயல்படாதது மற்றும் உரிய உபகரணங்களுடன் சம்பவ இடத்திற்கு செல்லாதது உள்ளிட்ட காரணங்களுக்காக மாவட்ட தீயணைப்பு அதிகாரி ரித்தீஜ் உள்பட 5 பேர் இடமாற்றம் செய்யப்பட்டனர்.



தீயணைப்பு வீரர்கள் மீது அதிகாரிகள் நடவடிக்கை எடுத்திருப்பது ஊழியர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Jan06

பஞ்சாப் மாநிலம் பெராஸ்பூரில் நலத்திட்டங்களை தொடங்கி à

Jun17

குறுவை நெல் சாகுபடி தொகுப்பு திட்டத்தை முதலமைச்சர் <

Oct01

புதுடெல்லி கடந்த ஓராண்டில் அரிசி, கோதுமை மற்றும் ஆட்டà®

Feb05

பேரறிவாளன் உள்பட 7 பேர் விடுதலை விவகாரத்தில் முடிவு எடà

Jun18

கர்நாடக துணை முதல்-மந்திரி 

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, கடமையை இன்று பொறுப்பேற்ற

Sep24

கேரளாவில் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா நடத்திய முழு à®

Jan22

சென்னை கொடுங்கையூரில், கடந்த 14-ந் தேதி, வியாசர்பாடியை சà

Jul07

பீகார் மாநிலத்தின் முங்கர் மாவட்டத்தில் உள்ள கொத்வானà

Jul24

பளு தூக்குதல் - பெண்கள் 49 கிலோ எடைப்பிரிவில் இந்தியா வீà

Jul07
Share News

Sri Lanka

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

     
  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

     
*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Oct 15 (09:49 am )
Testing centres

World

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Oct 15 (09:49 am )
Testing centres