ரஷ்யா விரைவில் அதன் அண்டை நாடான உக்ரைனை ஆக்கிரமிக்கும் என்று அமெரிக்கா பல வாரங்களாக எச்சரிக்கை விடுத்து வருகிறது. இதனால் உக்ரைனில் உள்ள அமெரிக்கர்கள் உடனடியாக வெளியேறுமாறும் வெள்ளை மாளிகை நிர்வாகம் அறிவித்துள்ளது.
இந்நிலையில், உக்ரைன் விவகாரம் தொடர்பாக அமெதிக்க அதிபர் ஜோ பைடன், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டினுடன் தொலைபேசி மூலம் பேச்சுவார்த்தை நடத்தினார்.
ஒரு மணி நேரம் நடைபெற்ற இந்த பேச்சுவார்த்தையின்போது, உக்ரைன் எல்லையில் ரஷ்ய படை குவிப்பு குறித்து பைடன் கவலை தெரிவித்தார்.
படைகளை உடனடியாக திரும்ப பெறுமாறும் புடினுக்கு அவர் கோரிக்கை விடுத்தார். ரஷ்யா உக்ரைன் மீது படையெடுத்தால், அதிக மனித உயிர் இழப்புகள் ஏற்படும் என்று பைடன் குறிப்பிட்டார்.
ரஷ்யா உக்ரைனை தாக்கினால், அமெரிக்காவும் அதன் நட்பு நாடுகளும் உறுதியான பதிலடி கொடுக்கும், இதனால் ரஷ்யா மிகப் பெரிய இழப்புகளை சந்திக்க நேரிடும் என்றும் அப்போது பைடன் எச்சரித்ததாக கூறப்படுகிறது.
எனினும் இந்த பேச்சுவார்த்தையின் முடிவில் புடின் நிலைப்பாற்றில் மாற்றம் ஏதுவும் தெரியவில்லை என அமெரிக்க மூத்த அதிகாரி தெரிவித்துள்ளார்.
இரு தலைவர்களும் பேச்சுவார்த்தையை தொடர ஒப்புக் கொண்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
செவ்வாய் கிரகத்தில் உயிரினங்கள் இருந்ததா என்பது பற்ற
விண்வெளியில் மனிதர்களின் அடையாளங்களைப் பாதுகாக்கும்
வட கொரிய ஜனாதிபதி கிம் ஜாங் உன்னின் (Kim Jong Un) மனைவியும், மன
உக்ரைன் மீதான ரஷ்யாவின் ஆக்கிரமிப்பு ஏற்கனவே ஆரம்பித
தென்கிழக்கு ஆசிய நாடான மியான்மரில் ஜனநாயக ரீதியில் தே
ஆப்கானிஸ்தானில் வன்முறையால் தலிபான்கள் அதிகாரத்தைக்
அமெரிக்காவில் நாளுக்கு நாள் துப்பாக்கி சூடு சம்பவங்க
உக்ரைன் - ரஷ்ய மோதல்கள் ஆரம்பமான இரண்டொரு தினங்களில் ர
உக்ரைன் நேட்டோ அமைப்பில் இணைவதற்கு எதிர்ப்பு தெரிவித
ஆப்கானிஸ்தானில் அந்த நாட்டு அரசுக்கும், தலீபான் பயங்க
ஆப்கானிஸ்தானில் தலிபான் பயங்கரவாதிகளுக்கும் அந்நாட்
ஜம்மு-காஷ்மீர் ஸ்ரீநகரில் பதுங்கியிருக்கும் பயங்கரவ
உக்ரைனின் மரியூபோலில் அமைந்துள்ள உருக்காலையில் தஞ்ச
