அரச தாதியர்களின் பணிப்புறக்கணிப்பு போராட்டம் காரணமாக ‘ஒசுசல’ விற்பனை நிலையங்கள் மூலம் மருந்துகளை இலவசமாக வழங்குவதற்கு தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன (Channa Jayasumana) தெரிவித்துள்ளார்.
பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து அரச தாதி உத்தியோகத்தர்கள் சங்கம் கடந்த 4 நாட்களாக வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றது.
அரசாங்க தாதி உத்தியோகத்தர் சங்கத்தினால் முன்னெடுக்கப்பட்ட பணிப்புறக்கணிப்பு போராட்டம் தொடர்வதை தடுக்கும் வகையில் கொழும்பு மாவட்ட நீதிமன்றம் நேற்று இரண்டு தடை உத்தரவுகளை பிறப்பித்துள்ளது.
தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்ட போதிலும், இது தொடர்பாக தமக்கு அறிவிக்கப்படவில்லை என அரச தாதியர் சங்கம் தெரிவித்துள்ளது.
இதன் மூலம் தாம் தொடர்ந்தும் வேலைநிறுத்தப் போராட்டத்தை முன்னெடுத்துச் செல்வதாகவும், இந்த தடை உத்தரவு தொடர்பில் தமக்கு அறிவிக்கப்படும் பட்சத்தில், தொழிற்சங்க நடவடிக்கையைத் தொடர்வதற்கு சட்ட உதவியை நாடவுள்ளதாக சங்கம் மேலும் தெரிவித்துள்ளது.
இதேவேளை, நீதிமன்றத்தினால் பிறப்பிக்கப்பட்ட தடை உத்தரவுக்கு அமைவாக வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள சுகாதார ஊழியர்கள் தமது தொழிற்சங்க நடவடிக்கையை கைவிடுவார்கள் என சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல (Keheliya Rambukwella) நம்பிக்கை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சிக்கு எதிராக சமூக வலைத்à
யாழ் மாநகர முதல்வர் தெரிவு கோரம் இல்லாததால் மீளவும் ஒà®
இலங்கைக்கு சிமெந்து இறக்குமதி செய்து வந்த சுமார் 35 நிற
மனித உரிமைகள் பேரவையின் கடந்தகால தீர்மானங்களை போலன்றà
ஜனாதிபதி கோட்டாபயவை பதவி விலக கோரி அனைத்து பல்கலைக்கழ
நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவருக்கும் இன்று (செவ்வாயà
தொடர்ந்து பெய்து வரும் கடும் மழை காரணமாக தெற்கு அதிவேà®
நாட்டில் நாளை முதல் 21ஆம் திகதி வரை மின்வெட்டு அமுல்படு
இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் அலைனா பி ரெப்லிற்ஸ் அம
ஒருமித்த நிலைப்பாட்டில் தமிழ் மக்களின் பிரச்சினைகளை à
கிளிநொச்சி மாவட்டத்தின் 7ஆவது பொலிஸ் நிலையம் இன்று உதà¯
கொழும்பில் இன்று இடம்பெற்ற போராட்டத்தை கலைப்பதற்காக à
நாட்டில் சுமார் 1000 தொழிற்சங்கங்கள் இன்று முதல் பணிப்பà¯
புத்தளத்தில் இடம்பெற்ற வாகன விபத்து ஒன்றில் சிறுமிà
முல்லைத்தீவு மாவட்டத்தின் தமிழரசு கட்சியின் மத்திய சà
