மோசடி நடவடிக்கை ஒன்று தொடர்பில் இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகராலயம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
சமூக ஊடகங்களில் இடம்பெற்று வரும் ஆட்சேர்ப்பு மோசடி தொடர்பிலேயே இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
“கனடா அரசாங்கத்தின் ஆட்சேர்ப்பு பிரச்சாரம் 2022” என்ற தலைப்பில் சமூக ஊடகங்களில் பரவும் விளம்பரங்கள் தொடர்பில் அவதானமாக இருக்குமாறும் அது போலியானதெனவும் கனேடிய உயர்ஸ்தானிகராலயம் டுவிட்டர் பதிவொன்றை பதிவிட்டு தெரிவித்துள்ளது.
குறித்த போலி வேலைவாய்ப்பு பிரச்சாரம் நடவடிக்கையில், ஆட்சேர்ப்பு மூலம் உடனடி பணி அனுமதிகளை வழங்கப்படுவதாக உறுதியளித்து மக்களை ஏமாற்றுவதாக தெரியவந்துள்ளதென கனேடிய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.
இந்த பிரச்சாரம் பொய்யானது என மீண்டும் வலியுறுத்திய இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகராலயம், பொதுமக்கள் விழிப்புடன் இருக்குமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
இவ்வாறான மோசடிகள் மற்றும் குடிவரவு மோசடிகளில் இருந்து தங்களை பாதுகாத்துக்கொள்ளுமாறும் பொது மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஒன்லைன் குடியேற்ற மோசடிகள் குறித்து பொதுமக்கள் விழிப்புடன் இருக்க உயர் ஸ்தானிகராலயம் இணைப்பொன்றையும் வெளியிட்டுள்ளது.
கடந்த 18 மாதங்களில் 168 மாணவர்கள் மற்றும் இளைஞர்-யுவதிகள்
ரஷ்ய போர் விமானத்தை உக்ரைன் வான் பாதுகாப்பு பிரிவு சு
ஏ.டி.எம். மற்றும் கிரெடிட் கார்ட் அட்டை வழங்கும் அமெரிக
மஸ்கெலியா - காட்மோர், கிங்கொரோ பிரிவில் பாரிய மண்திட்ட
உக்ரைனுடன் ரஷ்யா இன்று 13வது நாளாக போரில் ஈடுபட்டுள்
இலங்கையில் சுமார் 4000 உக்ரைன் சுற்றுலா பயணிகள் தங்கியு
சுற்றுலாத் துறை அமைச்சகத்தின் கூற்றுப்படி, கொரோனா காப
பல நூற்றாண்டுகளாக இருந்ததாக கருதப்படும் மர்மத் தீவு த
மனைவியின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டதால் தனது இளம் ம
உலக சுகாதார நிறுவனத்தின் ஐரோப்பியப் பிராந்தியத்தி
இந்து சமுத்திர பிராந்தியத்தில் தமது நலனை அடைவதற்கு ரஷ
உக்ரைன் ரஷ்யா போர் நிலைமை தீவிரமடையும் பட்சத்தில், பு
கொவிட் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மூளையில் மாற்
உக்ரைனில் கருங்கடல் பகுதியில் சிக்கித் தவித்த தமிழகத
இலங்கைக்கு சுற்றுலா பயணிகளாக வருகை தந்துள்ள உக்ரேனிய
