பிரபல ஜோதிடர் ஒருவரின் மனைவி தனது இரண்டு பிள்ளைகளுடன் 20 மில்லியன் ரூபாய் பெறுமதியான சொத்துக்களுடன் தப்பிச் சென்ற சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக முல்லேரியா பொலிஸார் கொழும்பு மேலதிக நீதவான் சந்திம லியனகேவிடம் நேற்று அறிவித்துள்ளனர்.
47 பவுன் தங்கம் மற்றும் 140 லட்சம் ரூபாய்க்கும் அதிக பணத்துடன் தனது மனைவி பிள்ளைகள் இருவருடன் தப்பி சென்றுள்ளதாக முல்லைரியா பிரதேசத்தை சேர்ந்த பிரபல சோதிடர் முல்லேரியா பொலிஸ் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
முறைப்பாட்டிற்கமைய, இரண்டரை வயது மற்றும் ஒன்றரை வயது குழந்தைகளை அவரது மனைவி தன்னுடன் அழைத்துச் சென்றுள்ளதாக முல்லேரியா பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்வாறு பொருட்களை கொள்ளையடித்த மனைவி வெளிநாடு செல்ல முயற்சித்து வருவதாக நீதிமன்றத்தில் தெரியவந்துள்ளது. இதனால் அவரது வெளிநாட்டு பயணங்களை தடை செய்யுமாறு நீதிமன்றத்தில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.சட்டப்பூர்வமான மனைவிக்கு, குழந்தைகளையும் சொத்துக்களையும் எடுத்துச் செல்ல உரிமை உண்டு எனவும், அதன் விளைவாக அவர் வெளிநாடு செல்வதைத் தடை செய்ய சட்டப்பூர்வ ஆதாரம் இல்லை எனவும், கூறிய நீதவான் அந்தக் கோரிக்கையை நிராகரித்துள்ளார்.
அமெரிக்க டொலர்களில் சுங்கத் தீர்வையை செலுத்தி வாகனங்
முல்லைத்தீவு மாவட்டம் முள்ளிவாய்க்கால் மண்ணில் பி
புதிய பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் தலைமையின் கீழ் பொ
அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சிக்கு எதிராக சமூக வலைத்
வல்வெட்டித்துறை நகர சபையின் தலைவர் பதவியிலிருந்து வி
அஸ்ட்ராசெனெகா இரண்டாம் தடுப்பூசி இன்றைய தினம் கொழும்
அத்தியாவசிய மருந்துகள் மற்றும் சத்திரசிகிச்சைகளுக்க
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 48ஆவது தொடர் கடந
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தலைவர் பதவியிலிருந
பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவிற்கு சென்ற அனைத்த
நாட்டில் இந்த வார இறுதியில் மின்வெட்டு அமுல்படுத்தப்
கொவிட் -19 தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால
மேல், சப்ரகமுவ, மத்திய, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்
திருகோணமலை எண்ணெய் தாங்கிகளை இலங்கை தனித்து அபி
சுகாதார அமைச்சினால் பிறப்பிக்கப்பட்ட தனிமைப்படுத்தல