கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு பயணிகள் ரயில் சேவையை ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார். சிங்கள ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலின் போது இந்த தகவலை அவர் வெளியிட்டார்.
புதிய ரயில் பாதைகளை அமைக்கும் பணியை எதிர்காலத்தில் வெளிநாட்டு நிறுவனங்களுக்கு வழங்கப்பட மாட்டாது. புதிய தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்த ரயில்வே திணைக்களம் பல திட்டங்களை நடைமுறைப்படுத்த திட்டமிட்டுள்ளதாகவும் ராஜாங்க அமைச்சர் தெரிவித்தார்.
உள்நாட்டு ஊழியர்களை பயன்படுத்தி இந்த ஒப்பந்தம் ஆரம்பிக்கப்படும். முடிந்தளவு வெளிநாட்டு ஊழியர்களுடன் ஒப்பந்தமின்றி இந்த திட்டம் அமுல்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
விமான நிலையத்தில் இருந்து ரயிலில் ஏறி செல்வதென்றால் எவ்வளவு இலகுவான விடயமாக இருக்கும். அதற்கமைய இந்த திட்டம் விரைவில் ஆரம்பிக்கப்படும்.
திட்டத்திற்கமைய விமான நிலையத்தில் இருந்து கொழும்பு, குருநாகல், கண்டி, யாழ்ப்பாணம் உள்ளிட்ட பல இடங்களுக்கு செல்ல கூடிய வகையில் இந்த திட்டத்தை முன்னெடுக்க எதிர்பார்த்துள்ளோம் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
குத்தகை தவணையை செலுத்த அடுத்த வருடம் மார்ச் மாதம் வரை
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் ஜப்பானிய பிரதமர்
இந்த அரசாங்கம் பிள்ளையையும் கிள்ளி தொட்டிலையும் ஆட்ட
தியாக தீபம் திலீபனின் 35 ஆவது நினைவு தினம் இன்று யாழ்
கிளிநொச்சி திருவையாறு இரண்டாம் பகுதியில் உள்ள வீட்டி
நோயாளி ஒருவரை வைத்தியசாலைக்குக் கொண்டு செல்வதற்கு மு
இலங்கையில் உள்ள அரச வங்கி பாரிய நிதி நெருக்கடியை எதிர
இஞ்சியில் ஏகப்பட்ட மருத்துவ குணங்கள் காணப்படுகிறது. இ
மேல், மத்திய, சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் க
திரிபோஷாவில் புற்றுநோயை உண்டாக்கும் அஃப்ளாடோக்சின்
இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் கௌரவ
யாழ்ப்பாணம் காரைநகர் கசூரினா சுற்றுலா கடற்கரை பகுதிய
யாழ்ப்பாணம் இணுவில் பகுதியில் சிறுவன் மீது வன்முறை கு
யாழ். வலிகாமம் வலயத்துக்குட்பட்ட பாடசாலை ஒன்றில் கல்வ
தங்களுடைய கோரிக்கையின்படியே வடகடலில் பேரூந்துகள் இற