More forecasts: 30 day weather Orlando

செய்திகள்

  • All News
  • ஜேர்மனியில் இருந்து இலங்கை வந்த பெண்ணுக்கு நேர்ந்த பரிதாப நிலை
ஜேர்மனியில் இருந்து இலங்கை வந்த பெண்ணுக்கு நேர்ந்த பரிதாப நிலை
Feb 09
ஜேர்மனியில் இருந்து இலங்கை வந்த பெண்ணுக்கு நேர்ந்த பரிதாப நிலை

கொள்ளுப்பிட்டியில் உள்ள ஹோட்டல் ஒன்றிற்குள் ஜேர்மனி பெண் ஒருவர் போதைப்பொருள் கொடுத்து பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்..



சம்பவத்திற்கு முகம் கொடுத்தவர் 32 வயதுடைய பெண் என கொள்ளுப்பிட்டி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.



சம்பவம் தொடர்பில் 28 வயதான பிரபல வர்த்தகர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். ஜேர்மனி பெண் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.



சந்தேக நபரான குறித்த வர்த்தகர், ஜேர்மன் பெண்ணுடன் கடந்த 6 வருடங்களாக நண்பராக இருந்து வந்துள்ளதாக பொலிஸ் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.



ஜேர்மன் பெண்ணின் தந்தை முன்னாள் கடற்படை அதிகாரி எனவும் அவர் இலங்கையர் எனவும் தாய் ஜேர்மன் நாட்டை சேர்ந்தவர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.



டிசம்பர் மாதம் 18ஆம் திகதி இலங்கை வந்த அவர், தங்காலையில் உள்ள உறவினர் வீட்டில் தங்கியிருந்த நிலையில் நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கும் சென்று வந்துள்ளார்.



இதேவேளை, சந்தேகநபருடன் இரண்டு வாரங்களாக குறித்த பெண் கண்டி பிரதேசத்தில் உள்ள ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.



கடந்த 6ஆம் திகதி நாட்டை விட்டு வெளியேறவிருந்த குறித்த பெண் கடந்த 4ஆம் திகதி குறித்த வர்த்தகருடன் கொள்ளுப்பிட்டி பிரதேசத்தில் உள்ள ஹோட்டல் ஒன்றிற்கு சென்றுள்ளார்.



அன்றைய தினம் இரவு விடுதிக்கு சென்ற இருவரும் மறுநாள் காலை வரை மது அருந்தியுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது. இதன் போது அந்த பெண்ணின் கடன் அட்டை தொலைந்து போனதால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.



அதன் பின்னர் இரவு குறித்த பெண்ணை மயக்கமடைய செய்யும் வகையில் போதை மாத்திரையை குறித்த இளைஞன் வழங்கியுள்ளார். அதன் பின்னர் காலை எழுந்து பார்க்கும் போத தான் துஷ்பிரயோகத்திற்குட்படுத்தப்பட்டுள்ளதாக குறித்த பெண் முறைப்பாடு செய்துள்ளார்.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Feb25

தற்போது அமெரிக்க அதிபராக தான் இருந்திருந்தால் உக்ரைனà

Mar05

செர்னிஹிவ் நகரின் குடியிருப்பு பகுதியில் நேற்று வியாà

Mar03

நான்கு ரஷ்ய போர் விமானங்கள் ஸ்வீடனின் வான் பரப்பில் அà®

Feb15

நாளை முதல் அமுலுக்கு வரும் வகையில் நாள் தோறும் ஒரு மணிà

Feb26

உக்ரைன் - ரஷ்ய மோதல் இலங்கையின் பொருளாதாரத்தை கடுமையாà®

Feb27

உக்ரைன் மீது ரஷ்யா தற்போது பயங்கரமான தாக்குதலை நடத்தி

Feb28

ரஷ்ய ராணுவத்திடம் சரணடையாத உக்ரைன் ராணுவ வீரர்களின் க

Feb26

உக்ரைன் மீது ரஷ்யா தொடர்ந்து தாக்குதல் நடத்தி வரும் நà®

Mar03

உக்ரைன் மீது ரஷ்யப் படைகள் 7வது நாளாக ஆக்ரோஷமான தாக்குà

Mar02

உக்ரைனில் கொல்லப்படுவதற்கு சற்று முன்பு ரஷ்ய வீரர் ஒர

Mar05

புட்டினின் பத்தில் எட்டுப் பங்கு இராணுவம் உக்ரைய்னிலà

Feb25

உக்ரைன் ரஷ்யா போர் நிலைமை தீவிரமடையும் பட்சத்தில், புà®

Mar03

ஐரோப்பிய நாடாளுமன்றத்தின் சிறப்பு அமர்வில் உக்ரைன் அà

Feb26

இலங்கையில் சுமார் 4000 உக்ரைன் சுற்றுலா பயணிகள் தங்கியுà®

Mar02

உக்ரைனியர்கள் எங்களை தாக்குகிறார்கள், பெண்கள் என்று க

Share News

Sri Lanka

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

     
  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

     
*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Oct 15 (21:53 pm )
Testing centres

World

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Oct 15 (21:53 pm )
Testing centres