ஒரே மாதத்தில் குண்டான உடல் மெலிந்து ஸ்லிம் ஆகனுமா? இந்த பழத்தை தினமும் சாப்பிடுங்க
Feb07
ஒரே மாதத்தில் குண்டான உடல் மெலிந்து ஸ்லிம் ஆகனுமா? இந்த பழத்தை தினமும் சாப்பிடுங்க
பாதாம், முந்திரி, பிஸ்தா உள்ளிட்ட பொருட்களை விட உலர்ந்த அத்திப்பழத்தில் பல நன்மைகள் அடங்கியுள்ளது. இதில் நார்ச்சத்து அதிகம் இருப்பதோடு, கலோரிகள் மிகவும் குறைவு என்பதால் இதை தினமும் சாப்பிட்டு வந்தால் உடல் எடையை விரைவாக குறைத்துவிடலாம். சரி வாங்க தினமும் உலர்ந்த அத்திப்பழம் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் குறித்து பார்க்கலாம்..
நன்மைகள்:-
ஒரு துண்டு உலர்ந்த அத்திப்பழத்தில் 47 கலோரிகள் உள்ளது. இதனால் 0.2 கிராம் கொழுப்பை தான் இதில் இருந்து பெற முடியும். எனவே உடல் எடையைக் குறைக்க நினைப்போருக்கு, இது மிகவும் சிறப்பான ஸ்நாக்ஸ்.
உலர்ந்த அத்திப்பழத்தில் நார்ச்சத்து அதிகம் இருக்கிறது. அதிலும் 3 துண்டு உலர்ந்த அத்திப்பழத்தில் ஒரு நாளைக்கு உடலுக்கு வேண்டிய 5 கிராம் நார்ச்சத்து நிறைந்துள்ளது. இதனால் மலச்சிக்கல் மற்றும் இதர செரிமான பிரச்சனைகள் நீங்கி குடலியக்கம் சீராக நடைபெறும்.
உணவில் உப்பு அதிகம் சேர்த்து வந்தால் உடலில் சோடியத்தின் அளவு அதிகரிக்கும். அதன் காரணமாக உயர் இரத்த அழுத்தம் ஏற்படும். ஆனால் உலர்ந்த அத்திப்பழத்தில் பொட்டாசியம் அதிகமாகவும் சோடியம் குறைவாகவும் இருப்பதால் இதனை தினமும் உட்கொண்டு வந்தால் உயர் இரத்த அழுத்தத்தைத் தடுக்கலாம்