2021 ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் (உ/த) பரீட்சை இன்று காலை 8.30 மணிக்கு நாடு முழுவதும் உள்ள 2,438 பரீட்சை நிலையங்களில் நடைபெறும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் எல்.எம்.டி தர்மசேன (L.M.D Dharmasena) தெரிவித்தார்.
நாளைய பரீட்சைக்கு 279,141 பாடசாலை பரீட்சார்த்திகளும், 66,101 தனிப்பட்ட பரீட்சார்த்திகளும் என மொத்தம் 345,242 பரீட்சார்த்திகள் தோற்றவுள்ளனர்.
இதேவேளை, கொரோனா தொற்றுக்குள்ளான பரீட்சார்த்திகளுக்காகவும், தனிமைப்படுத்தலில் உள்ளவர்களுக்காகவும் மாவட்ட வைத்தியசாலைகளுக்கு அருகாமையில் 29 பரீட்சை நிலையங்கள் நிறுவப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் கூறியுள்ளார்.
அனைத்து பரீட்சார்த்திகளும் பரீட்சை ஆரம்பிப்பதற்கு அரை மணித்தியாலத்திற்கு முன்னதாகவே பரீட்சை நிலையங்களுக்கு வருகை தந்து தமது பரீட்சை இலக்கங்களுக்கு ஏற்ப ஆசனங்களை அடையாளம் காணுமாறு ஆணையாளர் நாயகம் கேட்டுக்கொண்டுள்ளார்.
பரீட்சார்த்திகள் பரீட்சைக்கு செல்லும்போது, தேசிய அடையாள அட்டை (NIC) மற்றும் பரீட்சை அனுமதி அட்டையை தம்வசம் வைத்திருக்க வேண்டும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் கூறியுள்ளார்.
தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபை ஊடாக தமக்கு வழ
நாட்டில் நாளொன்றில் அதிகளவான கொரோனா மரணங்கள் நேற்று ப
2019 ஆம் ஆண்டு ஜெனீவாவில் நிறைவேற்றப்பட்ட வன்முறை மற்று
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு ஆதரவாக சமூக ஊடக ஆர்வல
நாடளாவிய ரீதியில் அதிகரித்து வரும் வாகன விபத்துக்களை
சர்வதேச தொழிலாளர் தினத்தினை முன்னிட்டு இன்றையதினம் ந
அரச ஊழியர்கள் மற்றும் அரச துறையில் ஓய்வு பெற்றவர்களுக
கொழும்பின் பல பகுதிகளுக்கு நாளை (மார்ச் 04) மதியம் 02:00 மணி
நேற்று புதன்கிழமை இரவு கிடைத்த பி.சி.ஆர். பரிசோதனை அறிக
வீதியில் இருக்கும் உரிமையே இல்லையென்றால் இலங்கை அரசி
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முன்னாள் உறுப்ப
வடக்கு கிழக்கு சிவில் சமூகத்தினரால் முன்னெடுக்கப்பட
கிளிநொச்சி, கிருஸ்ணபுரம் பகுதியில் நேற்று மாமனாரு
தோட்டத்தொழிலாளர்களின் குறைந்தபட்ச நாளாந்த சம்பளத்தை
நேற்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் 750 மில்ல