அதிமுக மாநிலங்களவை உறுப்பினர்களாக இருந்த கே.பி முனுசாமி மற்றும் வைத்திலிங்கம் ஆகியோர் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றதால் தங்களுடைய எம்பிக்கள் பதவியை ராஜினாமா செய்தனர். இதனால் அவ்விரு இடங்களும் காலியானது. அந்த இடங்களுக்கு அக்டோபர் 4ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது.
திமுக வேட்பாளர்களாக கனிமொழி சோமு மற்றும் ராஜேஷ் குமார் ஆகியோர் களம் இறக்கப்பட்டனர். கடந்த 21ஆம் தேதி தலைமைச் செயலகத்தில் சட்டப் பேரவைச் செயலாளரிடம் இருவரும் வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனர். அவர்களது மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டன. வேறு யாரும் வேட்புமனு தாக்கல் செய்யாததால் கனிமொழி சோமு மற்றும் ராஜேஷ் குமார் ஆகிய இருவரும் போட்டியின்றி தேர்வு செய்யப்படுவதாக சட்டப்பேரவை செயலாளர் சீனிவாசன் அறிவித்தார். அவர்களுக்கான வெற்றி சான்றிதழையும் நேற்று வழங்கினார்.
இந்த நிலையில், திமுக சார்பில் மாநிலங்களவை உறுப்பினர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள கனிமொழி சோமுவும் ராஜேஷ்குமாரும் முதல்வர் மு.க ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர். அப்போது முதல்வர் மு.க ஸ்டாலினின் மனைவி துர்கா ஸ்டாலின் உடனிருந்தார். அவர்கள் எடுத்துக்கொண்ட புகைப்படம் தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.
தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், கொரோனா வைரஸ
கரூரில் முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி வீட்டில் வர
பேஸ்புக் மூலம் அறிமுகமாகி கடந்த 5 ஆண்டுகளாக காதலித்து
14-வது ஜூனியர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி (19 வயதுக்க
மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களை திரும்பப்பெறக்க
தமிழக சட்டசபை தேர்தலில்
தமிழகத்தில், 1 லட்சம் விவசாயிகளுக்கு புதிய மின் இணைப இந்தியாவுக்கான கொலம்பியா, உருகுவே, ஜமாய்க்கா, ஆர்மீனி மேல் கொத்மலை நீர்த்தேக்கத்திலிருந்து பாடசாலை மாணவி டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சி ஆட்ச கொரோனா இரண்டாவது அலையை சமாளிக்கும் வகையில் புதுச்சேர இந்தியாவில் ஏப்ரல், மே மாதங்களில் 645 குழந்தைகள், கொரோனா சாலை மறியல் செய்த விஜய் ரசிகர்கள் மீது போலீசார் தடியட உத்தர பிரதேச மாநிலம் வாரணாசி நகரில் பிரதமர் மோடி ரூ.1,500 கள்ளக்குறிச்சி அருகே சினிமா பட பாண