நடிகர் விஜய்யின் 65-வது படம் ‘பீஸ்ட்’. நெல்சன் இயக்கத்தில் உருவாகும் இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டேவும், வில்லனாக செல்வராகவனும் நடிக்கின்றனர். அனிருத் இப்படத்திற்கு இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், விஜய்யின் 66-வது படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி இப்படத்தை பிரபல தெலுங்கு இயக்குனர் வம்சி பைடி பல்லி இயக்க உள்ளதாக அறிவித்துள்ளனர். இவர் ஏற்கனவே தமிழில் கார்த்தி நடித்த தோழா படத்தை இயக்கி உள்ளார்.
தளபதி 66’ படத்தை வெங்கடேஷ்வரா கிரியேசன்ஸ் சார்பாக பிரபல தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜு தயாரிக்கிறார். இப்படம் தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் தயாராக உள்ளது.
வழக்கமாக பெரிய நடிகர்களின் படங்கள் குறித்த அறிவிப்புகள் முன் அறிவிப்போடு தான் வெளியிடப்படும். ஆனால் சமீப காலமாக அந்த டிரெண்ட் மாறி உள்ளது. அஜித்தின் வலிமை குறித்த அறிவிப்புகள் எந்தவித முன்னறிவிப்பும் இன்றி வெளியிடப்பட்டன. அதேபோல் தற்போது விஜய்யின் ‘தளபதி 66’ அப்டேட்டும் அவ்வாறே வெளியிடப்பட்டு உள்ளது.
கோவில்களை பக்தர்களிடம் தமிழக அரசு கொடுக்க வேண்டும் என
நடிகை கீர்த்தி சுரேஷ் தற்போது தென்னிந்திய சினிமாவில்
கமல் ஹாசன் நடிப்பில் சமீபத்தில் வெ
தமிழ் திரையுலகில் மிகவும் பிரபலமான நட்சத்திர ஜோடிகளா
எச். வினோத் இயக்கத்தில் அஜித் நடித்து வரும் திர
உலகளவில் தற்போது பாக்ஸ் ஆபிஸ் வசூலை குவித்து வரும் தி
குற்றம் 23’ படத்தை அடுத்து அருண் விஜய்யும், இயக்குனர்
ஜெயம் ரவி நடிப்பில் வெளிவந்த வனமகன் படத்தின் மூலம் தம
தமிழில் கடந்த 2001-ம் ஆண்டு வெளியான ‘ஆனந்தம்’ படம் மூல
பிரபல நடிகை மற்றும் இயக்குனர் ஆயிஷா சுல்தானா. இவர் சமீ
தமிழ் சினிமா
ரஜினி மகள் ஐஸ்வர்யா மற்றும் நடிகர் தனுஷ் இருவரும் காத
கடந்த வருடம் நேரடியாக அமேசான் பிரைமில்
மலையாள நடிகர் பிரித்விராஜ், சினிமாவில் நடிகராகும் முன
இந்திய சினிமாவில் யாரும் எதிர்ப்பாரத வெற்றியை கே ஜி எ