அமெரிக்காவில் உள்ள டெக்சாஸ் மாகாணம் எல்பாசோ என்ற இடத்தில் அமெரிக்கா-மெக்சிகோ எல்லை பகுதி அமைந்துள்ளது. இதில் பல இடங்களில் சரியான தடுப்பு வேலிகள் கிடையாது.
இந்தநிலையில் அந்த பகுதிக்கு வந்த மெக்சிகோ வீரர்கள் 14 பேர் 2 வாகனங்களில் அமெரிக்காவுக்குள் நுழைந்துவிட்டனர்.
இதுபற்றி தகவல் அறிந்ததும் அமெரிக்க படையினர் விரைந்து வந்து 14 பேரையும் சுற்றிவளைத்து கைது செய்தனர். அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது. அப்போது எல்லை பகுதியில் இடம்தெரியாமல் தவறுதலாக அமெரிக்காவுக்குள் வந்துவிட்டதாக அவர்கள் கூறினார்கள்.
ஆனாலும் வேறு காரணங்கள் இருக்கலாம் என்று கருதி 14 பேரையும் அமெரிக்க ராணுவம் கைது செய்தது. அவர்களிடம் ராணுவ உயர் அதிகாரிகள் விசாரணை நடத்தினார்கள்.
இதற்குள் விஷயம் அறிந்து மெக்சிகோ உயர் ராணுவ அதிகாரிகளும் எல்லையில் திரண்டனர். அவர்கள் அமெரிக்காவிடம் 14 பேரையும் விடுவிக்கும்படி கேட்டுக்கொண்டனர். அமெரிக்க ராணுவத்தின் விசாரணையில் 14 பேரும் தவறுதலாக எல்லை தாண்டி வந்தது உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து 13 வீரர்களை அமெரிக்கா விடுவித்தது. ஒரே ஒரு நபர் மட்டும் தடுத்து வைக்கப்பட்டார். அவர் தன்வசம் கஞ்சா வைத்திருந்தார். எனவே அவரிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் இருந்து கடந்த திங்கட்
கொரோனா வைரசின் தாக்கம் உலகம் முழுவதும் பாதிப்பை ஏற்பட
1991 வரையில் சோவியத் யூனியன் ஏறக்குறைய 1,700 அணு ஆயுதங்கள
பெகாசஸ் மூலம் தலைவர்களின் செல்போன் ஒட்டு கேட்கப்பட்ட
கிழக்கு லடாக் பகுதியில் எல்லை பிரச்சினை காரணமாக இந்தி
ஈரான் நாட்டின் தலைநகர் டெஹ்ரானில் இருந்து தென்மேற்கே
உக்ரைன் தலைநகர் கீவ் அருகே உள்ள புச்சா நகரில் மனித உரி
ரஷ்யாவுக்கு எதிராக போரிடஇ உக்ரைனுக்கு 600 மில்லியன் டொல
உக்ரைனில் கடுமையாக போர் நடந்து வருவதால், அங்கிருந்து
அமெரிக்காவின் மத்திய புளோரிடாவில் உள்ள பொழுதுபோக்கு
துபாயில் கடந்த அக்டோபர் 1 முதல் சர்வதேச கண்காட்சி நடைப
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் வழக்கு விசார
மியான்மரில் ஜனநாயக ரீதியில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரச
வங்கதேசம் நாடு கடந்த 1971-ம் ஆண்டு பாகிஸ்தானில் இருந்து ப
சீனாவின் வுகான் நகரில் வெளிப்பட்ட கொரோனா வைரஸ் உலக நா
