மத்திய அரசு கொண்டு வந்துள்ள மூன்று வேளாண் சீர்திருத்த சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி விவசாயிகள் தொடர்ந்து போராடி வருகின்றனர். நாளை நாடு தழுவிய முழு அடைப்பு போராட்டம் நடைபெறும் என்று அறிவித்துள்ளனர். 40 விவசாய சங்கங்கள் இணைந்த ‘சம்யுக்தா கிசான் மோர்ச்சா’ என்ற அமைப்பின் சார்பில் இந்த போராட்டம் நடத்தப்படுகிறது. இதற்கு பல்வேறு அரசியல் கட்சிகள், அமைப்புகள் ஆதரவு தெரிவித்துள்ளன.
இந்நிலையில், விவசாய சங்கத் தலைவர் ராகேஷ் திகாயித் அரியானா மாநிலம் பானிபட்டில் நடந்த விவசாயிகள் மகா பஞ்சாயத்து கூட்டத்தில் பங்கேற்றார். அப்போது பேசிய அவர், மத்திய அரசு வேளாண் சட்டங்களை விரைவில் ரத்து செய்யாவிட்டால், சம்யுக்தா கிசான் மோர்ச்சா அமைப்பு நாடு முழுவதும், ஒவ்வொரு பகுதிக்கும் சென்று போராட்டம் நடத்தும் என்றார்.
நாட்டின் ஒவ்வொரு பகுதியிலும் மத்திய அரசுக்கு எதிராக பொதுக்கூட்டங்கள், போராட்டங்கள் நடத்தப்படும், தேர்தல் நடைபெறும் மாநிலங்களில் பாஜகவுக்கு எதிராக பிரசாரம் மேற்கொள்ளப்படும் என்றும் ராகேஷ் திகாயித் கூறினார்.
இந்தியாவில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை மிகவும் வேக
தமிழகத்தில் வரும் டிசம்பர் மாதத்துக்குள் மாநகராட்சி
முதல்-அமைச்சர்
முதல்-மந்திரி ஹிமந்த விஸ்வ சா்மா குவாஹாட்டியில் செய்த காஷ்மீரில் பயங்கரவாதிகளுடனான மோதலில் துப்பாக்கி குண இதுதொடர்பாக, சிவகங்கையில் செய்தியாளர்கள் சந்திப்பில ஆளுநர் பன்வாரிவால் புரோஹித்தை எட தருமபுரியில் பாமக வேட்பாளர்கள் அறிமுக பிரச்சார கூட இயன்முறை மருத்துவர்களின் முயற்சிகளைப் போற்றுவோம் என பிரான்ஸில் இருந்து மேலும் 3 ரஃபேல் போர் விமானங்கள் இந் ரஷ்ய உக்ரைன் போர் தொடங்குவதற்கு ஒருநாள் முன்பு, இந்தி தூத்துக்குடி மாநகராட்சி தேர்தலையொட்டி, வாக்குச்சாவட இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகரிக்க தொடங்கிய நிலைய எந்த வயதிலும் சாதிக்க முடியும் என்பது தான் பழமொழிக்கு கொரோனா தொற்றின் 2-வது அலை தீவிரமடைந்துள்ள நிலையில் நாட
