வெளிநாட்டு தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகி வந்த ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சி கடந்த சில ஆண்டுகளாக இந்திய தொலைகாட்சிகளிலும் ஒளிபரப்பாகி வருகிறது. தமிழில் கமல்ஹாசனும், தெலுங்கில் நாகார்ஜுனாவும், மலையாளத்தில் மோகன் லாலும், இந்தியில் சல்மான் கானும் தொகுத்து வழங்கி வருகின்றனர்.
பிக்பாஸ் நிகழ்ச்சி, இந்தியில் இதுவரை 14 சீசன் முடிவடைந்துள்ளது. தற்போது 15-வது சீசனுக்கான பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 15-வது சீசனை தொகுத்து வழங்க உள்ள நடிகர் சல்மான் கானுக்கு ரூ.350 கோடி சம்பளம் பேசி இருப்பதாக தகவல் வெளியாகி பட உலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கடந்த இரண்டு சீசன்களாக ஒரு வாரத்துக்கு ரூ.13 கோடி சம்பளம் வாங்கி வந்த சல்மான் கான், தற்போது அதனை ரூ.25 கோடியாக உயர்த்தி உள்ளாராம். இதன்மூலம் அவர் தொகுத்து வழங்க உள்ள 14 வாரத்துக்கு ரூ.350 கோடி சம்பளம் கிடைக்க உள்ளதாக கூறப்படுகிறது. ‘பிக்பாஸ் 15’ நிகழ்ச்சிக்காக நடிகர் சல்மான் கான் வாங்கும் சம்பளம் ‘பாகுபலி 2’ பட பட்ஜெட்டை (ரூ.250 கோடி) விட அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.
பசங்க, களவாணி படங்களில் நடித்து பலருடைய கவனத்தை ஈர்த்
கொரோனா வைரஸ் உலகமெங்கும் பரவி வரும் நேரத்தில் இந்தியா
நடிகர் விஜய்யின் அடுத்தப்படத்தின் ஹீரோயின் குறித்து
பிரபல பின்னணி பாடகர் உன்னி கிருஷ்ணன் தனது மனைவி மற்று
தளபதி விஜய் நடித்த ‘பிகில்’ மற்றும் ‘மாஸ்டர்’ ப
ரஜினி மகள் ஐஸ்வர்யா மற்றும் நடிகர் தனுஷ் இருவரும் காத
தென்னிந்திய மொழி படங்களில் அதிக சம்பளம் பெறும் நடிகைய
சிபி சக்ரவத்தி அ
நடிகர் அஜித்தின் 60வது படமான வலிமை படம் அடுத்த மாதம் ரி
நேற்று வெளியான அஜித்தின் வலிமை படத்தை ரசிகர்கள் கொண்ட
சூர்யா நடிப்பில் கடந்தாண்டு தீபாவளிக்கு வெளியாகி வெற
அஜித் நடிப்பில் தற்போது உருவாகி வரும் படம் வலிமை. வினோ
இயக்குனர் சுதா கொங்கராவின் அடுத்த திரைப்படத்தில் முன
யாமிருக்க பயமே', 'கவலை வேண்டாம்', 'காட்டேரி' ஆகிய ப
மிலிந்த் ராவ் இயக்கத்தில் நயன்தாரா நடிப்பில் வெளியாக