விஜய் நடிப்பில் கடந்த 2002-ம் ஆண்டு வெளியான ‘பகவதி’ படம் மூலம் திரையுலகில் அறிமுகமானார் ஜெய். இதையடுத்து சென்னை 28, சுப்ரமணியபுரம், எங்கேயும் எப்போதும், கலகலப்பு 2 என பல்வேறு ஹிட் படங்களை கொடுத்து தமிழ் திரையுலகில் தனக்கென ஓர் இடத்தை பிடித்தார்.
இதுவரை 25 படங்களில் நடித்துள்ள ஜெய், தற்போது இசையமைப்பாளராக அவதாரம் எடுத்துள்ளார். சுசீந்திரன் இயக்கத்தில் உருவாகி உள்ள ‘சிவ சிவா’ படத்துக்கு நடிகர் ஜெய் இசையமைத்துள்ளார்.
இதுகுறித்து நடிகர் ஜெய் கூறியதாவது: “ஆரம்பத்தில் சினிமாவில் இசையமைப்பாளர் ஆக வேண்டும் என்ற கனவில் இருந்தேன். எதிர்பாராத விதமாக நடிகர் ஆனேன். இருப்பினும் இசையமைப்பாளர் ஆக வேண்டும் என்ற எனது 19 வருட கனவு தற்போது நனவாகி உள்ளது” என நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.
சிவ சிவா படத்துக்காக அவர் இசையமைத்துள்ள ‘காட முட்ட’ என்கிற பாடல் நேற்று வெளியிடப்பட்டது. இப்பாடல் வரிகளை வைரமுத்து எழுதி உள்ளார். அனல் ஆகாஷ் இப்பாடலை பாடி உள்ளார். இப்பாடலுக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.
பிரவீன் பென்னட் இயக்கத்தில் விஜய் தொலைக்காட்சியில் 2019
பாகுபலி படத்தின் பிரம்மாண்ட வெற்றியை தொடர்ந்து ராஜமவ
நடிகர் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா விவாகரத்து தகவல் தான் ச
பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகியுள்
நீதித்துறையின் மீது எனக்கிருந்த நம்பிக்கை மேலும் அதி
ஹாலிவுட் தரத்தில் ஒரு பேய்ப் படம் 'கிராண்மா' என்கிற
சிவா இயக்கத்தில் உருவாகி உள்ள ‘அண்ணாத்த’ படத்தில்
கமல் ஹாசன் நடிப்பில் சமீபத்தில் வெ
ஐஸ்வர்யா ரஜினிகாந்த் உருவாக்கிய பயணி என்ற ஆல்பம் பாடல
பீஸ்ட் படத்திற்கு எதிர்பார்த்த அளவுக்கு ரெஸ்பான்ஸ் க
தென்னிந்திய திரையுலகில் மிகவும் பிரபலமான நடிகையாக தி
தமிழில் கார்த்தியுடன் காற்று வெளியிடை படத்தில் நடித்
தமிழ் சினிமாவில் ரன் படம் மூலம் மிகவும் பிரபலமானவர் ந
தீவிர அரசியல் ஈடுபட்டு வந்த உதயநிதி ஸ்டாலின் தற்போது