உலக சுகாதார அமைப்பு மற்றும் சர்வதேச தொழிலாளர் அமைப்பு ஆகியவை சமீபத்தில் ஒரு ஆய்வை நடத்தியது.
அந்த ஆய்வில் ஒவ்வோர் ஆண்டும் கிட்டத்தட்ட 20 லட்சம் பேர் வேலை தொடர்பான காரணங்களால் உயிரிழப்பதாக தகவல் வெளியானது. சிலர் நீண்ட நேரம் வேலை செய்வதாலும், காற்று மாசுபாடு காரணமாகவும் இறந்துள்ளனர்.
2016-ம் ஆண்டில் வேலைச் சூழல் காரணமாக ஏற்பட்ட நோய்கள், காயங்கள் ஆகியவற்றால் 19 லட்சம் பேர் இறந்ததாகத் தெரிய வந்தது.
இந்த ஆய்வில் மொத்தம் 19 வேலையிடம் சார்ந்த அபாயங்கள் இருப்பதும் தெரியவந்தது. காற்று மாசுபாடு, ஆஸ்துமாவை ஏற்படுத்தக்கூடிய ரசாயனங்கள், புற்றுநோயை ஏற்படுத்தக்கூடிய ரசாயனங்கள், இரைச்சல் ஆகிய அம்சங்கள் இந்த ஆய்வில் கருத்தில் கொள்ளப்பட்டன.
தென் கிழக்காசியா, மேற்கு பசிபிக் பகுதிகளில் உள்ள ஊழியர்களிடம் வேலை தொடர்பான இறப்பு விகிதம் எதிர்பார்த்ததை விட அதிகமாக இருந்ததாக ஆய்வு தெரிவிக்கிறது.
இதுதொடர்பாக பேசிய உலக சுகாதார நிறுவனத்தின் தலைமை இயக்குநர் டெட்ரோஸ் கெப்ரியேஸஸ், இந்த புள்ளிவிவரங்கள் தமக்கு அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது. ஆய்வு முடிவுகள் உலக நாடுகள் நடவடிக்கை எடுக்கத் தூண்டுதலாக அமையும் என தெரிவித்தார்.
உலக சுகாதார அமைப்பு ஒவ்வொரு வாரமும் உலக அளவில் கொரோனா
உக்ரைனில் போர்க்குற்றங்களைச் செய்யும் எந்தவொரு ரஷ்ய
மியான்மரில் ஜனநாயக ரீதியில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரச
மேற்கு நேபாளத்தில் நிலச்சரிவு காரணமாக அச்சாம் மாவட்ட
அமெரிக்கா-ஈரான் இடையே அணு ஆயுதவிவகாரத்தில் பிரச்சினை
அண்மைய நாட்களில் கொவிட்-19 தொற்றுகள் அதிகரித்ததைத் தொட
கனடாவில் தமிழர் ஒருவரை வாகனத்தில் மோதிவிட்டு தப்பிச்
பிரபல வைர வியாபாரி நிரவ் மோடியும், அவரது உறவினர் மெகுல
உலகை அச்சுறுத்தி கொண்டிருக்கும்
ரஷ்யாவின் புதிய போலிச் செய்திச் சட்டத்தினால் டிக்டொக கொரோனாவின் கோரப்பிடியில் சிக்கி அமெரிக்கா ஓராண்டுக் அவுஸ்ரேலியாவில் அவசர பயன்பாட்டுக்காக பைசர் கொரோனா தட கொரோனாத் தொற்றின் நெருக்கடிக்கு மத்தியிலும் போர்த்த இட்டோபிகோக்கில் தெய்வாதினமாக ரயில் விபத்திலிருந்து அமெரிக்க கடற்படை தளபதி மைக் கில்டே இந்த வாரம் இந்தியா
