More forecasts: 30 day weather Orlando

உலகம்

  • All News
  • விண்வெளி நிலைய பணி - சீன விண்வெளி வீரர்கள் 3 பேர் 90 நாட்களுக்கு பிறகு பூமிக்கு திரும்பினர்...
விண்வெளி நிலைய பணி - சீன விண்வெளி வீரர்கள் 3 பேர் 90 நாட்களுக்கு பிறகு பூமிக்கு திரும்பினர்...
Sep 18
விண்வெளி நிலைய பணி - சீன விண்வெளி வீரர்கள் 3 பேர் 90 நாட்களுக்கு பிறகு பூமிக்கு திரும்பினர்...

சீனா விண்வெளியில் தனக்கென புதிதாக ஒரு விண்வெளி நிலையத்தைக் கட்டமைத்து வருகிறது. 2022-ம் ஆண்டுக்குள் இந்த விண்வெளி நிலையத்தை முழுமையாக கட்டமைத்து பயன்பாட்டுக்கு கொண்டுவர சீனா திட்டமிட்டுள்ளது.



தியான்ஹே எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த விண்வெளி நிலையத்துக்கான மையப்பகுதி கடந்த ஏப்ரல் மாதம் 29-ம் தேதி சுற்றுவட்டப் பாதையில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டது.



அதைத்தொடர்ந்து தியான்ஹே விண்வெளி நிலையத்தை கட்டமைக்கும் பணிகளை மேற்கொள்வதற்காக நை ஹைஷெங், (56) லியு போமிங் (54) மற்றும் டாங் ஹோங்போ (45) ஆகிய 3 விண்வெளி வீரர்கள் கடந்த ஜூன் மாதம் 16-ம் தேதி சென்ஷு 12 விண்கலம் மூலம் விண்வெளிக்கு அனுப்பப்பட்டனர்.



அங்கு அவர்கள் விண்வெளி நிலையத்தை செயல்பாட்டுக்கு கொண்டு வருவதற்கான பணிகளில் முழு வீச்சில் ஈடுபட்டனர். இதற்காக அவர்கள் 2 முறை விண்வெளி நடை பயணத்தையும் மேற்கொண்டனர்.



இதற்கிடையே, திட்டமிட்டபடி 90 நாட்கள் விண்வெளியில் தங்கி இருந்து கட்டுமான பணிகளை மேற்கொண்டு வந்த சீன விண்வெளி வீரர்கள் 3 பேரும் நேற்று முன்தினம் காலை சென்ஷு 12 விண்கலத்தில் பூமிக்குப் புறப்பட்டனர்.



இந்நிலையில், உள்ளூர் நேரப்படி நேற்று மதியம் 1.30 மணிக்கு சீனாவின் வடக்குப் பகுதியில் உள்ள கோபி பாலைவனத்தில் சென்ஷு 12 விண்கலம் வெற்றிகரமாக தரையிறங்கியது.



இதையடுத்து, அங்கு தயார் நிலையில் இருந்த தொழில்நுட்ப வல்லுனர்கள் விண்கலத்தைத் திறந்து விண்வெளி வீரர்கள் 3 பேரையும் பத்திரமாக வெளியேற்றினர். விண்வெளி வீரர்கள் 3 பேரும் நல்ல உடல் ஆரோக்கியத்துடன் இருப்பதாக சீன விண்வெளி ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.



 






வரவிருக்கும் நிகழ்வுகள்
Mar23

அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி டிரம்ப் பேஸ்புக் டுவà

Feb11

அமெரிக்காவின் எதிரி நாடுகளான ரஷ்யா, ஈரான் மற்றும் சீனà®

Jul07

அதிகரித்து வரும் கொரோனா வைரஸ் தொற்று பரவலால் ஊரடங்கு à®

Feb22

ஆப்கானிஸ்தானி்ல் பணிக்கு செல்லும்

Jun12

இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட எட்டு மில்லியன் பைசà

Mar06

உக்ரைன் வான்பரப்பில் விமானங்கள் பறக்க தடை செய்யப்பட்à

Aug30
Sep16

சில நாட்களுக்கு முன்பு ரஷ்யப் படைகளிடமிருந்து மீட்கபà

May28

கனடாவின் Bowmanville உயர்நிலைப் பள்ளியில் மாணவர்கள் மற்றும் à

Jan22

அமெரிக்க ஜனாதிபதியாக ஜோ பைடன் பதவியேற்றதற்கு சீனா வாழ

Sep21

மஹ்சா அமினி என்ற இளம் பெண் பொலிஸ் காவலில் இறந்ததை எதிரà

May18

 போர்க் குற்றச் செயல்கள் தொடர்பிலான விசாரணைகளை முன்à

Apr30

மியன்மாரில் இரண்டு விமானத் தளங்கள் குண்டு வெடிப்பு மற

Jun08

இலங்கையின் கடன் சுமையை சமாளிக்க மற்ற நாடுகள் மற்றும் à®

Apr01

தினந்தோறும் ஒரு மில்லியன் பேரல் கச்சா எண்ணெய்யை சேமிப

Share News

Sri Lanka

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

     
  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

     
*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Oct 17 (17:02 pm )
Testing centres

World

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Oct 17 (17:02 pm )
Testing centres