கேரள மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற ஆரன்முளா பார்த்தசாரதி கோயிலில் இருந்து மண்டல காலத்தில் சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு தங்க அங்கி கொண்டு செல்லப்படுகிறது. ஓணம் பண்டிகையை முன்னிட்டு ‘வள்ள சத்யா’ நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. பாரம்பரிய படகுகளில் பக்தர்கள் பம்பை ஆறு வழியாக கோயிலுக்கு செல்வார்கள். கடுமையாக விரதமிருக்கும் பக்தர்கள் மட்டுமே இப்படகில் செல்ல முடியும். இது ‘பள்ளி ஓடம்’ என்று அழைக்கப்படுகிறது. இந்தப் படகில் ஏறுவதற்கு பெண்களுக்கு அனுமதி கிடையாது.
இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு மலையாள டி.வி நடிகை நிமிஷா இப்படகில் ஏறி போட்டோ ஷூட் நடத்தினார். காலில் ஷூ மற்றும் ஜீன்ஸ் பேண்ட், டிசர்ட் அணிந்தபடி போட்டோவுக்கு போஸ் கொடுத்தார். இது கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதையடுத்து நிமிஷா, தனக்கு இதன் பாரம்பரிய பெருமை தெரியாது என்று கூறி மன்னிப்பு கேட்டார். இதற்கிடையே மத உணர்வுகளைப் புண்படுத்தியதாக கூறி, ஆரன்முளா கோயில் நிர்வாகிகள் ஆரன்முளா போலீசில் புகார் கொடுத்தனர். போலீசார் நிமிஷா மற்றும் அவருக்கு உதவி செய்த உன்னி என்பவர் மீது வழக்குப் பதிவு செய்தனர். பிறகு விசாரணைக்காக நிமிஷா, உன்னி இருவரும் ஆரன்முளா போலீஸ் நிலையத்தில் ஆஜரானார்கள். விசாரணைக்குப் பிறகு இருவரையும் போலீசார் கைது செய்தனர். பிறகு ஜாமீனில் விடுவித்தனர்.
தமிழ் சினிமாவில் ரன் படம் மூலம் மிகவும் பிரபலமானவர் ந
இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் விக்ரம், கார்த்தி, ஜெ
இந்தி திரையுலகில் வாரிசு நடிகர், நடிகைகள் ஆதிக்கம் உள
பிக்பாஸ் அல்டிமேட் ஆனது ஹாட்ஸ்டாரில் 24 மணி நேரம் ஒளிப்
பிரபல தெலுங்கு நடிகை காயத்ரி டாலி ஹோலி கொண்டாட்டம் மு
தமிழில் அச்சமுண்டு அச்சமுண்டு, நிபுணன் போன்ற படங்களை
மலையாளத்தில் வெளியான அய்யப்பனும் கோஷியும் என்ற படத்த
ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்த இந்தியன் 2 படம், வி
பழைய ஜோக் தங்கதுரை என்ற அடைமொழி கொண்ட தங்கதுரை, தற்போத
வலது காலில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ள கமல்ஹாசன்
தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் குழந்தை நட்சத்
தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக திகழ்ந்து வ
பாலிவுட்டில் கடந்த 2018 ஆம் ஆண்டு ஆயுஷ்மான் குரானா நடிப்
இந்தியாவில் கடந்த 2 மாதங்களாக வேகமாக பரவி வந்த கொரோனா த
வலிமை படம் நாளை ரிலீஸ் ஆகிறது. அதை பெரிய அளவில் கொண்டாட