ஆப்கானிஸ்தானில் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றியுள்ளது தலிபான் அமைப்பு. தற்போது அரசமைப்பதில் தலிபான் அமைப்பு தீவிரம் காட்டி வருகிறது.
அதே நேரத்தில் தலிபான்களின் பழமைவாத கொள்கைகளாலும் நடவடிக்கைகளாலும் கொதிப்பில் உள்ள ஒரு பகுதி மக்கள், அவர்களுக்கு எதிராக பல இடங்களில் போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். இதனால் ஆப்கானிஸ்தானில் அரசியல் ஸ்திரமற்றத் தன்மை நிலவி வருகிறது.
இந்நிலையில் காபூலில் இருக்கும் நார்வே நாட்டுத் தூதரகத்தைக் கைப்பற்றியுள்ள தலிபான், பல அட்டூழியங்களை அங்கு நிகழ்த்தியுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இது குறித்து ஈரான் நாட்டுக்கான நார்வே தூதர் சிக்வால்டு ஹாக், 'தலிபான்கள், தற்போது காபூலில் இருக்கும் நார்வே தூதரகத்தைக் கைப்பற்றியுள்ளனர். எங்கள் நாட்டுத் தூதரகத்தை மீண்டும் ஒப்படைப்பதாக அவர்கள் சொல்கிறார்கள். அதே நேரத்தில் அவர்கள் அங்கிருக்கும் ஒயின் பாட்டில்களை உடைத்துள்ளனர். சிறுவர்களுக்கான புத்தகங்களை அழித்துள்ளனர். அவர்களைப் பொறுத்தவரை துப்பாக்கிகள் மிக ஆபத்துக் குறைவானவை போல' என்று வருத்தத்துடன் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
சில நாட்களுக்கு முன்னர் தலிபான், வெளிநாடுகளின் தூதர கட்டிடங்களை எதுவும் செய்ய மாட்டோம் என்று உறுதியளித்திருந்தனர். ஆனால் அவர்களின் செயல்பாடு அதற்கு மாறாக உள்ளது.
அவுஸ்திரேலியாவில் தமிழ்நாட்டைச் சேர்ந்த முகமது ரகமத
உள்நாட்டு போர், பயங்கரவாதம், வறுமை உள்ளிட்ட காரணங்களா
வண்ணங்களின் பண்டிகையான ஹோலி பண்டிகை உலகம் முழுவதும் உ
மத்திய ஹிரான் பகுதியில் அமெரிக்கப் படைகளின் ஆதரவைப் ப
ராஜஸ்தானில் தனது மனைவியால் கடந்த ஒரு வருடமாக
ஆப்கானிஸ்தான் நாட்டில் ஆளும் அரசுக்கும், தலிபான் பயங் உக்ரைனிலிருந்து சுவிட்சர்லாந்து வந்துள்ள அகதிகளுக்க ரஷ்யா படையெடுக்கலாம் என்ற அச்சத்தில் இரண்டு முன்னாள் சீனாவின் வுகான் நகரில் வெளிப்பட்ட
ஆப்கானிஸ்தானில்
மேற்கத்திய நாடுகளுக்கு எதிராக புதிய பழிவாங்கும் பொரு அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக பதவியேற்றுள்ள ஜோ பைட கமலா ஹாரிஸ் அடுத்த அதிபர் தேர்தலில் போட்டியிடக்கூடும சிலி நாட்டின் சாண்டியாகோ நகரில் உள்ள பியூன் உயிரியல் திருமண முகூர்த்தத்திற்கு மணமகன் வர தாமதமானதால் மணமகள
