More forecasts: 30 day weather Orlando

இந்தியா

  • All News
  • சென்னை விமான நிலையத்தில் கொரோனா பரிசோதனை கட்டணம் குறைப்பு!
சென்னை விமான நிலையத்தில் கொரோனா பரிசோதனை கட்டணம் குறைப்பு!
Sep 08
சென்னை விமான நிலையத்தில் கொரோனா பரிசோதனை கட்டணம் குறைப்பு!

ஐக்கிய அரபு நாடுகளான துபாய், சார்ஜா, அபுதாபி ஆகிய பகுதிகளிக்கு செல்லக்கூடிய பயணிகள் பயணம் செய்யும் 72 மணி நேரத்திற்கு முன்பு கொரோனா பரிசோதனை செய்து தொற்று இல்லை என சான்றுடன் வர வேண்டும் என அந்த நாடு நிபந்தனை விதித்து உள்ளது.



இந்த நிலையில் கொச்சி போன்ற விமான நிலையங்களில் வெளிநாடு செல்லும் பயணிகளுக்கு வசதியாக கொரோனா பரிசோதனை மையம் அமைக்கப்பட்டு பயணத்திற்கு முன்பாக கொரோனா சான்று வழங்கப்பட்டு வருகிறது. அதேபோல், தமிழகத்தில் உள்ள விமான நிலையங்களில் கொரோனா பரிசோதனை மையங்கள் அமைத்து சான்று வழங்க வேண்டும் என்று துபாய் செல்லும் பயணிகள் கோரிக்கை விடுத்தனர்.



இதையடுத்து, சென்னை விமான நிலையத்தில் ஆய்வு செய்த மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பன்னாட்டு முனையத்தில் அதிநவீன வசதியுடன் கூடிய ஆர்.டி.பி.சி.ஆர். மையம் அமைக்க உத்தரவிட்டார்.



இந்த நவீன பரிசோதனை மையம் கடந்த மாதம் 5-ந் தேதி முதல் பன்னாட்டு விமான முனையத்தில் செயல்பாட்டிற்கு வந்தது. இங்கு ரேபிட் ஆர்.டி.பி.சி.ஆர். நவீன பரிசோதனை கருவிகள் மூலம் பரிசோதனை முடிவுகளை விரைவில் அறிந்து கொள்ளும் வண்ணம் 3 விதமான கட்டணங்கள் வசூலிக்கப்படுகின்றன.



அதன்படி, 8 மணி நேரத்தில் கொரோனா பரிசோதனை முடிவு தெரிய ரூ.900, 2 மணியில் இருந்து 4 மணி நேரத்தில் முடிவை அறிந்து கொள்ளை ரூ.2,500, 30 நிமிடத்தில் முடிவை அறிந்து கொள்ள ரூ.4 ஆயிரம் கட்டணம் செலுத்தி பயன்பெறலாம் என்ற திட்டம் அமலில் உள்ளது.



அதிலும் குறிப்பாக சென்னை மீனம்பாக்கம் விமான நிலையம் வரும் துபாய் உள்ளிட்ட ஐக்கிய அரபு நாடுகளுக்கு செல்லும் பயணிகள் கட்டாயமாக ரூ.4 ஆயிரம் கட்டணம் செலுத்தி பரிசோதனை செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது.



இந்த நிலையில் 30 நிமிடத்தில் முடிவு தெரிய நிர்ணயிக்கப்பட்ட ரூ.4 ஆயிரம் கட்டணம் அதிகமாக இருப்பதாகவும், அதை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து, தமிழக சுகாதாரத்துறை அதிகாரிகள், விமான நிலைய அதிகாரிகளிம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதன்படி, மொத்த கட்டணத்தில் இருந்து ரூ.600-ஐ குறைத்து ரூ.3400 செலுத்தினால் போதும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. இதற்கு பயணிகள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Oct23

மாநில அரசாங்கங்களின் இலவசத் திட்டங்களால் வரிசெலுத்தà¯

May18

 பேரறிவாளன் விடுதலை தொடர்பான வழக்கு இன்று விசாரணைக்à

Mar16

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை உயர்ந்து வருகி

Mar16

தமிழக தேர்தல் களம் உச்சக்கட்ட பரபரப்பை நெருங்கிவருகிà

May13

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம், ஊா்க்காட்டில் இரு பி

Oct03

பொதுத்துறை நிறுவனமான இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிà®

Aug19

திமுக அரசு அனைத்து துறைகளிலும்

Feb24

திருச்சி விமான நிலையம் அருகே காவேரிநகர் பகுதியில் உள்

Jun01

தமிழக முதலமைச்சர் வெளியிட்டுள்ள வீடியோ செய்தியில் கூà

Oct02

காங்கிரஸ் கட்சியில் இருந்து விலக முடிவு செய்துள்ள பஞ்

Oct13

2030 ஆம் ஆண்டுக்குள் இந்தியாவில் உள்ள அனைத்து பெரியவர்கà®

Jan18

ராமஜென்பூமி வழக்கில் உச்சநீதிமன்ற அளித்த தீா்ப்பின்à®

Feb03

இந்தியாவில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்படுவோரின் எணà¯

Nov27

உலகையே புரட்டி போட்ட கொரோனா வைரசை மருத்துவத்துறையினரà

Oct18

இந்தியாவில் பல மாநிலங்களில் தேசிய புலனாய்வு அமைப்பினà

Share News

Sri Lanka

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

     
  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

     
*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Oct 15 (12:18 pm )
Testing centres

World

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Oct 15 (12:18 pm )
Testing centres