நாடு தற்போது எதிர்க் கொண்டுள்ள பிரச்சினைக்கு தீர்வு காண அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ஷ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் ஆலோசனையை பெற வேண்டும் என்று அபயராம விகாரையின் விகாராதிபதி முருத்தெட்டுவே ஆனந்த தேரர் தெரிவித்துள்ளார்.
அபயராம விகாரையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது பேசிய அவர்,
இராணுவத்தினரால் அனைத்து விடயங்களையும் திறன்பட செயற்படுத்த முடியாது. நாடு தற்போது எதிர்க் கொண்டுள்ள பிரச்சினைக்கு தீர்வு காண ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் ஆலோசனையை பெற வேண்டும்.
சிறந்த தரப்பினரை உள்ளடக்கிய ஆலோசனை சபையை ஜனாதிபதி ஸ்தாபிக்க வேண்டும். கொவிட் தாக்கத்தின் காரணமாக சுபீட்சமான கொள்கை திட்டத்தை ஜனாதிபதியால் செயற்படுத்த முடியாமல்போயுள்ளது.
இனி வரும் காலங்களிலாவது சுபீட்சமான கொள்கை திட்டத்தை செயற்படுத்த வேண்டுமாயின் ஜனாதிபதி சிறந்த ஆலோசனைகளை பெற வேண்டும்.
இதேவேளை, அத்தியாவசிய பொருட்களை பெற்றுக் கொள்ளும் போது மக்கள் பெரும் அசௌகரியங்களை எதிர்க்கொள்கிறார்கள். சதொச விற்பனை நிலையத்தின் முன்பாக மக்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கிறார்கள் இந்நிலை தொடர்ந்தால் 'சீனி கொவிட் கொத்தணி' தோற்றம் பெறும் என்றார்.
ஹொரணை மாவட்ட வைத்தியசாலையில் நோயாளர்கள் மீது மின் விச
இலங்கையில் முதலீடு செய்யும் சுற்றுலா பயணிகளுக்கு நீண
அரசாங்கத்திற்கு எதிரான மக்களின் ஜனநாயக போராட்டம் இரா
இன்று (29) நள்ளிரவு முதல் எரிபொருள் விலை குறைக்கப்படுவத
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அர்ஜுன ரணதுங்க ஐக்கிய
ஆசிரியர் – அதிபர் சங்கங்களினால் முன்னெடுக்கப்பட்ட ஆ
வீதியில் இறங்கி போராடிய முல்லைத்தீவு மீனவர்கள் தாக்க
தியாக தீபம் திலீபனை நினைவு கூர்ந்து எதிர்வரும் ஞாயிற்
உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் மதுபானங்களின் திர
கொழும்பு மாவட்டத்தில் ஜனவரி முதலாம் திகதி முதல் இதுவர
யுத்தம் முடிவடைந்த பின்னர் 2010ஆம் ஆண்டுக்குப் பின்னர்
சீனாவின் சினோபார்ம் (sinopharm) கொவிட் 19 தடுப்பூசியின் 6 இலட்ச
நெல் சந்தைப்படுத்தல் சபையிடம் உள்ள 43,000 மெட்ரிக் டன
இரத்த இருப்பு குறைவடைந்து வருவதால் இரத்த தானம் செய்ய
இலங்கைக்கான பிரிட்டன் தூதுவர் சாரா ஹல்டன் மற்றும் ஸ்ர
