உலக சுகாதார அமைப்பின் தலைமை விஞ்ஞானி சவுமியா சுவாமிநாதன், நீலகிரி மாவட்டம் ஊட்டிக்கு வந்தார். பின்னர் மசினகுடி அருகே உள்ள ஆனைக்கட்டி ஆதிவாசி கிராமத்துக்கு சென்றார். அங்கு மக்களை சந்தித்து சுகாதாரம், குழந்தைகளின் கல்வி நிலை, கொரோனா தடுப்பூசி போட்டவர்களின் எண்ணிக்கை ஆகியவை குறித்து கேட்டறிந்தார்.
தொடர்ந்து பள்ளிக்கூடம் மற்றும் அங்கன்வாடி மையம் உள்ளதா? என விசாரித்தார். தொடர்ந்து ஆதிவாசி மக்களிடம் குழந்தைகள் அனைவரையும் கண்டிப்பாக படிக்க வைக்க வேண்டும் என்று அறிவுறுத்தினார். பின்னர் தெப்பக்காடு பகுதிக்கு வந்த சவுமியா சுவாமிநாதன் நிருபர்களிடம் கூறியதாவது:-
இந்தியாவில் கொரோனா பரவல் வெகுவாக குறைந்து விட்டது. இதேபோல் தமிழ்நாட்டிலும் கொரோனா தாக்கம் குறைந்து வருகிறது.
இன்றைய காலக்கட்டத்தில் மாணவ-மாணவிகள் பள்ளிக்கூடங்களுக்கு சென்று நேரடி வகுப்பில் கலந்து கொள்வது அவசியம். அவர்களுக்கு தொற்று ஏற்பட்டாலும் பெரிய அளவில் பாதிப்பு வராது.
இவ்வாறு அவர் கூறினார்.
தொடர்ந்து முதுமலை வனப்பகுதியை பார்வையிட்டார்.
திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்வதற்கு விசேட ஏற்பாட
தமிழகத்தில் திருநங்கையாக மாறிய மகனுக்கு அனைவர் முன்ன
கர்நாடக பா.ஜனதா தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள
கடல் மார்க்கமாக தமிழ்நாட்டிற்கும் பின்னர் மங்களூருவ
சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை மூலம்
டெல்லி இப்போது கொரோனா வைரசின் நான்காவது அலையை எதிர்கொ
மக்கள் மத்தியில் தான் நடிக்க வேண்டிய அவசியமோ, தேவையோ இ
பிரதமர் நரேந்திர மோடி இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்
கோவையில் கமல்ஹாசன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அ
சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, நீலகிரி மாவட்டத்தில் தேர
மத்திய அரசு கொண்டு வந்துள்ள மூன்று வேளாண் சீர்திருத்த
மும்பையில் கனமழையில் ஏற்பட்ட மண்சரிவால் வீடு, சுற்றுச
மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா பிறந்த நாளையொட்டி பிரத
21 துப்பாக்கி குண்டுகள் முழங்க, தேசிய கீதம் இசைக்க, மூவர
கடலூர் மாவட்டம் புவனகிரியில், அ.ம.மு.க.வின் பொதுச் செய
