More forecasts: 30 day weather Orlando

உலகம்

  • All News
  • கினியாவில் அதிபா் தலைமையிலான ஆட்சி கலைக்கப்பட்டதாக ராணுவம் அறிவிப்பு!
கினியாவில் அதிபா் தலைமையிலான ஆட்சி கலைக்கப்பட்டதாக ராணுவம் அறிவிப்பு!
Sep 06
கினியாவில் அதிபா் தலைமையிலான ஆட்சி கலைக்கப்பட்டதாக ராணுவம் அறிவிப்பு!

மேற்கு ஆப்பிரிக்க நாடான கினியா நாடு, பிரான்ஸ் நாட்டிடமிருந்து 1958 -ம் ஆண்டு விடுதலை பெற்றது. அந்நாட்டில் கடந்த 2010-ம் ஆண்டு ஜனநாயக முறைபப்படி நடைபெற்ற முதல் தேர்தலில் ஆல்பா காண்டே வெற்றி பெற்று அதிபரானாா். தொடா்ந்து அதிபராக இருந்து வந்த அவா், 3-வது முறையாக கடந்த ஆண்டு நடைபெற்ற தேர்தலிலும் வெற்றி பெற்று அதிபராகத் தொடா்ந்தாா். ஆனால் அவருக்கு எதிா்ப்பு வலுத்து வந்தது.



கினியாவின் அதிபர் ஆல்பா காண்டே பதவியேற்ற பின்னர், கினியா நாட்டில் இருந்து அலுமினியத்தின் தாது பொருட்களை ஏற்றுமதி செய்யும் பணிகள் மிக வேகமாக வளர்ச்சியடைந்தன. ஆனால் இந்த ஏற்றுமதியால் கினியா மக்கள் பலரது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.



இந்நிலையில், நேற்று அதிகாலை தலைநகா் கோனாக்ரியில் உள்ள அதிபா் மாளிகை அருகே கடுமையான துப்பாக்கிச்சூடு சப்தம் பல மணி நேரம் தொடா்ந்து கேட்டது. இதையடுத்து, அரசுத் தொலைக்காட்சியை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்த ராணுவ கா்னல் மமாடி டம்போயா, அதிபா் ஆல்பா காண்டே தலைமையிலான அரசு கலைக்கப்பட்டதாக அறிவித்தாா்.



அரசாங்கத்தை ஒரு தனி நபரிடம் ஒப்படைக்க இனியும் தாங்கள் விரும்பவில்லை. அரசாங்கத்தை இனி மக்களே வழிநடத்துவார்கள். நாட்டைக் காப்பற்ற வேண்டியது ஒவ்வொரு ராணுவ வீரனின் கடமை என அவர் குறிப்பிட்டார். இருப்பினும், அதிபரின் நிலை என்ன என்பது பற்றி அவா் எதுவும் தெரிவிக்கவில்லை.



கினியா ராணுவத்தின் இந்த செயல்பாடு குறித்து கண்டனம் தெரிவித்துள்ள ஐ.நா. பொதுச்செயலாளர் அண்டோனியோ குட்டரெஸ், “துப்பாக்கியின் பலத்தால் அரசாங்கத்தைக் கைப்பற்றுவதை வன்மையாகக் கண்டிக்கிறேன்” என தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.



இதற்கிடையே, ராணுவத்தின் ஒரு பிரிவினரின் தாக்குதல் முறியடிக்கப்பட்டதாக கினியாவின் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. இருப்பினும் அதிபரின் நிலை குறித்து பாதுகாப்பு அமைச்சகமும் தெரிவிக்காத நிலையில், அங்கு குழப்பம் நீடித்து வருகிறது.






வரவிருக்கும் நிகழ்வுகள்
May09

கிழக்கு ஜெருசலேமில் உள்ள ஷேக் ஜர்ராவில் பாலஸ்தீன குடு

Mar12

சீன தலைநகர் பெய்ஜிங்கில் வானில் இருந்து திடீரென புழு à®

Mar06

மனித உரிமை ஆர்வலரான பேராசிரியர் பெர்னாண்ட் டி வரேன்னஸ

Mar12

பிரம்மபுத்ரா நதியில் அணை கட்டும் திட்டத்துக்கு இந்திà

Feb07

மெல்போர்னில் நாளை (திங்கட்கிழமை) ஆண்டின் முதல் கிராண்à®

Mar29

ஆஸ்திரேலிய அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள பாதுகாப்புத்

Mar02

உக்ரைன் - ரஷ்யா நாடுகளுக்கு இடையேயான போர் 6 ஆவது நாளாக நà

Sep20

உக்ரைனுக்கு 2023 ஆம் ஆண்டும் குறைந்தபட்சம் 2.3 பில்லியன் பà

Sep04

நியூஸ்லாந்தின் ஓக்லாந்திலுள்ள விற்பனை நிலையமொன்றில்

Mar11

தமது நாட்டில் உற்பத்தியை நிறுத்தியுள்ள வெளிநாட்டு நிà

Oct20

கிழக்கு ஆப்பிரிக்க நாடான உகாண்டாவில் எபோலா நோய்த்தொறà

Mar07

ஐ. நா சபையின் ஜெனிவா மனித உரிமைச் சபை அமர்வு ஆரம்பமாகிய

Jun01

சீனாவின் வுகான் நகரில் வெளிப்பட்ட கொரோனா வைரஸ் உலக நாà®

May31

முதல் உலகப்போர்க்காலத்தில் நடந்ததுபோல, பதுங்கு குழிகà

Mar06

உக்ரைன் வான்பரப்பில் விமானங்கள் பறக்க தடை செய்யப்பட்à

Share News

Sri Lanka

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

     
  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

     
*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Oct 17 (16:03 pm )
Testing centres

World

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Oct 17 (16:03 pm )
Testing centres