ஆப்கானிஸ்தானின் ஆட்சி அதிகாரத்தை தலிபான்கள் கைப்பற்றியதும் ஒவ்வொரு நாடுகளும் தங்களுடைய நாட்டு மக்களை அங்கிருந்து பாதுகாப்பாக வெளியேற்றுவதில் கவனம் செலுத்தின. காபூல் விமான நிலையத்தை அமெரிக்க ராணுவ வீரர்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொண்டு மக்களை வெளியேற்றி வந்தனர்.
நேற்று நள்ளிரவுடன் அமெரிக்கப்படை முற்றிலுமாக ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேறிவிட்டது. உடனே, தலிபான் வீரர்கள் காபூல் விமான நிலையத்திற்குள் நுழைந்து, அதை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.
இதனால் ஆப்கானிஸ்தானில் இருந்து இன்னும் மீட்கப்படாத நபர்களை எப்படி மீட்பது என்று ஒவ்வொரு நாடுகளும் யோசித்து வருகின்றன. இந்தியாவைச் சேர்ந்தவர்களும் ஆப்கானிஸ்தானில் சிக்கியுள்ளனர்.
இந்த நிலையில் கத்தாருக்கான இந்திய தூதர் தீபக் மிட்டல், தலிபான்களின் அரசியல் அலுவலக தலைமை அதிகாரி ஷெர் முகமது அப்பாஸ் ஸ்டேனெக்ஜாயை இன்று சந்தித்தார். இந்த சந்திப்பு கத்தாரில் உள்ள தோஹாவில் நடைபெற்றது. அப்போது தீபக் மிட்டல் ஆப்கானிஸ்தானில் உள்ள பயங்கரவாதம் குறித்து கவலைத் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
பாதுகாப்பு, ஆப்கானிஸ்தானில் சிக்கியுள்ள இந்தியர்களை விரைவாக மீட்பது குறித்து ஆலோசனையில் முக்கிய இடம் பெற்றுள்ளது. ‘ஆப்கானிஸ்தானில் இருந்து மைனாரிட்டி மக்கள் இந்தியாவுக்கு வரவேற்கப்படுவார்கள். ஆப்கானிஸ்தான் மண் இந்தியாவுக்கு எதிரான நடவடிக்கை, பயங்கரவாதம் ஆகியவற்றிற்கு எந்த அடிப்படையிலும் பயன்படுத்தப்படக் கூடாது’ என்பதை வலியுறுத்தியுள்ளார்.
மேற்கு ஆப்பிரிக்காவின் பல நாடுகள் மற்றும் நைஜீரியா நா
ரஷ்யாவின் எதிர்க்கட்சித் தலைவரான அலெக்ஸி நவல்னியை விà
கொரோனா வைரசின் தாக்கம் உலகம் முழுவதும் பாதிப்பை ஏற்பட
இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத்தின் கணவர், இளவரசர்
ரஷ்யா - உக்ரைன் இடையே 8-வது நாளாக போர் நடைபெற்று வரும் நி
உக்ரைனின் இரண்டாவது பெரிய நகரமான கார்கிவின் வடக்கு மற
தென் அமெரிக்க நாடான கொலம்பியாவின் அதிபர் இவான் டியூக்
உக்ரைனுக்குள் ஊடுருவியதால் பல குடும்பங்களின் பிரிவுà®
முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் வலைதளம் ஹேக
ரஷ்யா அணு ஆயுதம் மூலம் பிரித்தானியாவைத் தாக்கினால், பà®
உக்ரைனிலிருந்து சுவிட்சர்லாந்து வந்துள்ள அகதிகளுக்க
ஸ்பெயினில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றினால் 60ஆயிரத்தி
போலந்து எல்லைக்கு அருகில், உக்ரைன் இராணுவ தளத்தின் மீà®
உக்ரைனுக்கு 2023 ஆம் ஆண்டும் குறைந்தபட்சம் 2.3 பில்லியன் பà
ஜனாதிபதி விளாடிமிர் புட்டினின் அணிதிரட்டல் உத்தரவுகà¯
