ஆப்கானிஸ்தான் தலிபான்கள் வசம் சென்றதையடுத்து, உலக நாடுகள் பலவும் ஆப்கனில் இருக்கும் தங்கள் நாட்டு குடிமக்களை அங்கிருந்து பாதுகாப்பாக வெளியேற்றும் நடவடிக்கையில் உடனடியாக இறங்கின.
இதற்கிடையில், தலிபான்களின் கொடுங்கோல் ஆட்சியின் கீழ் வாழ விரும்பாத ஆப்கன் மக்களும் நாட்டை விட்டு வெளியேறத் தொடங்கினர். ஆனால், காபூல் விமான நிலையம் நோக்கி வரும் ஆப்கன் மக்களை தலிபான்கள் துப்பாக்கி முனையில் விரட்டியடிப்பதாக தகவல் வெளியானது.
இந்நிலையில், ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேற நினைப்பவர்களைத் தடுக்க மாட்டோம் என்ற வாக்குறுதியை தலிபான்கள் நிறைவேற்ற வேண்டும் என அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் உள்பட 90 நாடுகள் விடுத்த கூட்டறிக்கையில் வலியுறுத்தப்பட்டு உள்ளது.
ஆப்கானிஸ்தானில் வசிக்கும் வெளிநாட்டவர்கள் மற்றும் ஆப்கானிஸ்தானியர் நாட்டை விட்டு வெளியேறுவதற்கு தலிபான்கள் எந்தவிதத் தடையும் விதிக்கக் கூடாது எனவும் அந்த அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
இந்தக் கூட்டறிக்கையில் அமெரிக்கா, ஆஸ்திரேலியா, கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, நியூசிலாந்து, சுவிட்சர்லாந்து, உக்ரைன் உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் பிரதிநிதிகள் கையெழுத்திட்டுள்ளனர்.
மரிக்கா பாடசாலையில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில்
தென்கிழக்கு ஆசியாவில் சீனா தனது அதிகாரத்தை விரிவுபடு
நவம்பரில் எட்டு மில்லியனுக்கும் அதிகமான மக்கள் வாழ்க
உலக அளவில் கொரோனா வைரசால் மிகவும் மேசமாக பாதிக்கப்பட்
சீனாவின் உகான் நகரில் தோன்றிய கொரோனா வைரஸ் பெருந்த
அமெரிக்காவின் இண்டியானாபோலிஸ் நகரில் அதிகாலையில் ஒர
உக்ரைனில் ரஷ்ய ராணுவ டாங்கிகளை தடுத்து அதன் மீறி, உக்ர
சீனாவின் வுகான் நகரில் வெளிப்பட்ட கொரோனா வைரஸ் உலக நா
இங்கிலாந்து இளவரசர் ஹாரி-மேகன் மார்க்கெல் இருவரும் கட
டுபாயில் கட்டப்பட்ட புதிய இந்து கோவிலின் திறப்பு விழா
ஆஸ்திரேலிய அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள பாதுகாப்புத்
உலக சுகாதார அமைப்பின் தென்கிழக்கு ஆசியாவுக்கான மண்டல
இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் இந்த மாத இறுதியில்
இங்கிலாந்து ராணி 2-ம் எலிசபெத்தின் மூத்த மகனும், இளவரசர
புதின் தனது நீண்ட காலத் தோழியான அலினா கபாவே என்ற பெண
