ஆஸ்திரேலியாவில் நேற்று ஒரே நாளில் 1,305 பேருக்கு புதிதாக கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. அதைத்தொடர்ந்து அங்கு மொத்த பாதிப்பு எண்ணிக்கை 50 ஆயிரத்தைக் கடந்தது.
கொரோனா வைரஸ் இரண்டாவது அலையின் கோரப்பிடியில் ஆஸ்திரேலியா சிக்கியுள்ளது. டெல்டா கொரோனாவை கட்டுப்படுத்த முடியாமல் அந்த நாடு திணறி வருகிறது.
இந்நிலையில், ஆஸ்திரேலியாவின் 2-வது மிகப்பெரிய நகரமான மெல்போர்னில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருவதால் அங்கு முழு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
70 லட்சம் மக்கள் தொகை கொண்ட மெல்போர்ன் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் ஏற்கனவே தொடர்ந்து 4 வாரங்களாக ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், தற்போது மீண்டும் நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக, விக்டோரியா மாகாணத்தின் பிரதமர் டான் ஆண்ட்ரூஸ் கூறுகையில் ‘‘ஊரடங்கை திரும்பப் பெற முடியாத அளவுக்கு மெல்போர்ன் நகரில் தொடர்ந்து கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. ஊரடங்குக்கு முன்பான சுதந்திரத்தை நினைத்து மகிழ்ச்சி கொள்கிறோம். மீண்டும் அந்த நாட்கள் திரும்பி வர வேண்டும் என தீவிரமாக விரும்புகிறோம்’’ என கூறினார்.
ரஷ்யாவுக்கு எதிராகப் பயன்படுத்த உலகின் அதிவேக ஏவுகணை
கருங்கடலில் உள்ள ரஷிய போர்க்கப்பலை உக்ரைன் அழித்ததைய
அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஜப்பான் ப
இஸ்ரேல் நாட்டில் கொரோனா பரவலை தடுக்க தீவிர நடவடிக்கை
கரீபியன் தீவுகளில் ஒன்றான ஹைதியில் நேற்று சக்திவாய்ந
ஐரோப்பிய நாடான நார்வேவில் மர்ம நபர் கத்திக்குத்து தாக
தென்னாப்பிரிக்காவில் முதலில் கண்டறியப்பட்ட ஒமைக்ர
மென்செஸ்டரில் உள்ள சீன தூதரக வளாகத்திற்குள் ஹொங்கொங்
கைகளுக்கும் முகத்திற்கும் இரட்டை மாற்று அறுவைச் சிகி
பல்வேறு நாடுகள் ரஷ்யாவிலிருந்து கச்சா எண்ணெய் இறக்கு
கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளுக்
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினுக்கு (Vladimir Putin) புற்று நோய் த
நாட்டில் கசீனோ வரி 500 மில்லியன் ரூபாவாக உயர்வடைந்துள்ள
வடகொரியாவுக்கு எதிராக தென்கொரியா ஏவிய ஏவுகணை சொந்தநா
இலங்கைக்கான விமான சேவைகளை ஆரம்பிக்கும் நோக்கில் ரஷ்ய
