நடிகர் விஷால் கடந்த 2004-ம் ஆண்டு வெளியான ‘செல்லமே’ திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். இதையடுத்து ‘சண்டக்கோழி’, ‘திமிரு’, ‘தாமிரபரணி’, ‘ஆம்பள’, ‘துப்பறிவாளன்’, ‘இரும்புத்திரை’, ‘சக்ரா’ என அடுத்தடுத்து ஹிட் படங்களை கொடுத்து முன்னணி நடிகராக உயர்ந்தார்.
இன்று பிறந்தநாள் கொண்டாடும் நடிகர் விஷாலுக்கு சமூக வலைதளங்களில் வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளன. இதையொட்டி து.ப.சரவணன் இயக்கத்தில் தான் அடுத்ததாக நடித்து வரும் புதிய படத்தின் தலைப்பு மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் விஷால் வெளியிட்டுள்ளார். அதன்படி இப்படத்திற்கு ‘வீரமே வாகை சூடும்’ என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.
இப்படத்தில் விஷாலுக்கு ஜோடியாக இளம் நடிகை டிம்பிள் ஹயாத்தி நடிக்கிறார். மேலும் நகைச்சுவை கதாபாத்திரத்தில் யோகிபாபுவும், மலையாள நடிகர் பாபுராஜ் வில்லனாகவும் நடிக்கின்றனர். யுவன் சங்கர் ராஜா இசையமைக்கும் இப்படத்திற்கு கவின் ராஜ் ஒளிப்பதிவு செய்கிறார். நடிகர் விஷால் தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான விஷால் பிலிம் பேக்ட்ரி மூலம் இப்படத்தை தயாரிக்கிறார். இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

வாரணம் ஆயிரம் படத்தில் மேக்னாவாக தமிழ் ரசிகர்களின் மன
தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பகல் நிலவு என்ற ச
நடிகை நஸ்ரியாவின் இன்ஸ்டாகிராம் பக்கம் ஹேக்கர்களா
ஹாலிவுட்டில் பிரபலமான திரைப்படம் ‘பாரஸ்ட் கம்ப்’.
புதுக்கோட்டை மருத்துவக் கல்லூரி அருகே உள்ள ஆஞ்சநேயர்
‘பரியேறும் பெருமாள்’ பட இயக்குநர் மாரி செல்வராஜ் இ
தமிழில் மைனா, வேட்டை, தெய்வத்திருமகள், தலைவா, வேலையில்ல
பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகியுள்
ஷங்கர் - ராம் சரண் கூட்டணியில் உருவாகும் படத்தின் ஒளிப
இந்தியில் ஆயுஷ்மான் குரானா நடிப்பில் கடந்த 2018-ம் ஆண்டு
தமிழில் செம்பருத்தி படத்தில் அறிமுகமாகி 1990 மற்றும் 2000-க
கோல்மால் இந்தி திரைப்பட நடிகையும், பிரபல டி.வி.நிகழ்ச்
தமிழ் சினிமாவில் பிசியான நடிகர்களில் ஒருவர் விஜய்சேத
தமிழ் சினிமாவில் சின்ன வயது முதல் நடித்து பிரபலமானவர்
பிரபல ஹாலிவுட் பாடகி கேகே வியாட் 11வது முறையாக கர்ப்பமட
