கொழும்பு துறைமுக நகரத்தில் புகைப்படம் மற்றும் காணொளி எடுக்க கட்டணம் வசூலிக்கப்படும் என கொழும்பு துறைமுக நகர நிறுவனம் அறிவித்துள்ளது.
அதற்கமைய தனியார் மற்றும் வணிக ரீதியிலான இரு பிரிவுகளின் கீழ் கட்டணம் வசூலிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தனியார் பிரிவில் இரண்டு முதல் ஐந்து பேருக்கு 30000 ரூபாயும், ஆறு முதல் பத்துப் பேருக்கு 50000 ரூபாயும், 10 பேருக்கு மேல் என்றால் கட்டணம் அதிகரிக்கும் எனவும் துறைமுக நகர நிறுவனம் தெரிவித்துள்ளது.
வணிகப்பிரிவில் 10 பேருக்கும் குறைவான நபர்களுக்கு 100000 ரூபாயும் மற்றும் 10 பேருக்கு மேல் இருந்தால், கட்டணம் மாறுபடும் எனவும் அந்நிறுவனம் அறிவித்துள்ளது.
இந்த இரண்டு பிரிவினருக்கும் ஒரே நேரத்தில் மூன்று மணி நேரம் வழங்கப்படும் என துறைமுக நகர நிறுவனம் மேலும் தெரிவித்துள்ளது.
துறைமுக நகரின் நடைபாதை சில தினங்களுக்கு முன்னர் மக்கள் பாவனைக்காக திறக்கப்பட்டது. இந்நிலையில் குறித்த நகரை பார்க்க பெருமளவு மக்களை படையெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
விஞ்ஞான ஆய்வுக்கான மிக உயர்ந்த ஜனாதிபதி விருது தமிழரா
அரச ஊழியர்களின் ஓய்வூதிய வயதை 60 ஆக மாற்றியமையினால் 9 வீ
மட்டக்களப்பு மாவட்டத்தில் கொரோனாவினால் உயிரிழ்தவர
இன்று நள்ளிரவு முதல் எதிர்வரும் இரண்டு வாரங்களுக்கு ம
யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரி அண்மித்த பகுதியில் போதைப
யாழ் போதனா மருத்துவமனையில் நேற்று திங்கட்கிழமை நிலவர
தீபாவளி தினத்தன்று தமிழ் அரசியல் கைதிகளில் ஒரு பிரிவி
யாழில் 7251 குடும்பங்களுக்கு 10 ஆயிரம் ரூபா பெறுமதியான
இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவிற்கு இதுவரை ஆணைக்
பரபல போதைப்பொருள் வியாபாரியான ஹைபிரிட் சுத்தா என்பவர
ஐக்கிய மக்கள் சக்கியினரின் ஆர்ப்பாட்ட பேரணியானது தற்
எதிர்வரும் வாரம் முதல் கோதுமை மாவின் விலை குறைவடையும்
பெர்ப்பச்சுவல் ட்ரசரீஸ் நிறுவனத்தின் பணிப்பாளர் அர்
ஈழத்தின் வரலாற்றுச் சிறப்புமிக்க பொன்னாலை வரதராஜப் ப
எதிர்வரும் நாட்களிலம் நாடு முழுவதும் கடும் வெப்பமான க
