கட்டுநாயக்க விமான நிலையத்தின் சுகாதார பாதுகாப்பு நிலைமை மிகவும் வருத்தமளிப்பதாக இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
விமான நிலையத்தில் பணிபுரியும் பொது சுகாதார ஆய்வாளர்கள் 6 பேருக்கு கோவிட் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளதென சங்கத்தின் தலைவர் உப்புல் ரோஹன தெரிவித்துள்ளார்.
மிகவும் அர்ப்பணிப்புடன் செயற்பட்ட 6 பேர் இவ்வாறு கோவிட் தொற்றுக்குள்ளாகியுள்ளனர்.
கடந்த காலங்களாக கட்டுநாயக்க விமான நிலையத்தின் பாதுகாப்பு தொடர்பில் சுகாதார பிரிவுகளிடம் சுட்டிக்காட்டியிருந்தோம். எனினும் இந்த விடயம் தொடர்பில் பெரிதாக ஒருவரும் கண்டுகொள்ளவில்லை.
கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வரும் வெளிநாட்டவர்கள் மற்றும் இலங்கையர்கள் சுகாதார பாதுகாப்பை மீறி செயற்படுகின்றார்கள்.
முகக்கவசம் அணிவதில்லை. அத்துடன் சுகாதார பரிசோதகர்களுக்கு ஓய்வு பெற அறையில்லாத நிலைமை ஒன்று காணப்படுகின்றது.
இவ்வாறான விடயங்கள் தொடர்பில் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை என்றால் கட்டுநாயக்க விமான நிலையத்தில் பணியாற்றும் சுகாதார பரிசோதகர்கள் அனைவரும் கடமையில் இருந்து விலக வேண்டிய நிலைமை ஏற்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டில் அமுல்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் விதி
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் பங்கேற்கும் “கிரா
வவுனியா நீதிமன்றால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த
அஸ்ட்ரா-செனகா தடுப்பூசியை பெற்றுக் கொண்டவர்களுக்கு பà
ஆட்கடத்தலை கண்காணிப்பதற்கு அவுஸ்திரேலிய அரசாங்கத்தி
பிரித்தானியாவில் இனங்காணப்பட்ட B.1.1.7 என்ற புதிய வகை கொரà¯
நாளையும் நாளை மறுதினமும் இரண்டு மணித்தியாலங்களும் 20 நà
நீர்கொழும்பு நீதிமன்ற வளாகத்திலுள்ள இரு ஊழியர்கள் கொà
அரச வருமானத்திற்கு பங்களிப்பு செலுத்தும் அரச நிறுவனஙà
மின்சார கட்டணத்தை அதிகரிக்க வேண்டும் என மின்சக்தி மற்
வட மாகாணத்தில் மாவட்டங்களுக்கு இடையே கால்நடைகளை கொண்à
பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காணும் உண்மையான நோக்கà
வெசாக் தினத்தை முன்னிட்டு எதிர்வரும் 15ஆம் திகதி நாட
நாளை முதல் இனிவரும் காலங்களில் எந்தவொரு சமையல் எரிவாய
ஊடகங்களுக்கு அழுத்தம் கொடுக்கும், அச்சுறுத்தல் விடுகà
