வடக்கு மாகாண சபையின் அமைச்சுக்களின் செயலாளர்களுக்கு இன்று முதல் இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.
வடக்கு மாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜாவால் வழங்கப்படவுள்ள இந்த இடமாற்ற உத்தரவுக்கமைய தற்போதைய கல்வி, சுகாதாரம், பேரவை, உள்ளூராட்சி மற்றும் ஆளுநர் செயலக செயலாளர்களே இடமாற்றப்படுகின்றனர்.
அதன்படி சுகாதார அமைச்சின் செயலாளர் செந்தில்நந்தனன் மாகாண சபை பேரவை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
ஆளுநரின் செயலாளர் சரஸ்வதி மோகநாதன் சுகாதார அமைச்சின் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
கல்வி அமைச்சின் செயலாளர் இளங்கோ உள்ளூராட்சி அமைச்சின் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
தற்போது உள்ளூராட்சி அமைச்சின் செயலாளராகவுள்ள வரதீஸ்வரன் கல்வி அமைச்சின் செயலாளராக மாற்றப்பட்டுள்ளார்.
பேரவை செயலாளர் குகநாதன் பிரதி பிரதம செயலாளராக (நிர்வாகம்) நியமிக்கப்பட்டுள்ளார்.
இதுவரை, பதில் பிரதி பிரதம செயலாளராகவும் பணியாற்றி வந்த, பற்றிக் ரஞ்சன் உள்ளூராட்சி திணைக்களத்தின் ஆணையாளராகச் செயற்படுவார்.
ஆளுநரின் செயலாளராகத் தற்போது பிரதேச செயலாளராக கடமையாற்றும் ஒருவர் நியமிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இதற்கான அறிவித்தல் நேற்று (19) மாலைய தொலைநகல் மூலம் அனுப்பிவைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
அரசமைப்பின் 13 ஆவது திருத்தத்துக்கு அமைவாகவும், ஐக்கிய
கோரிக்கைகளை முன்வைத்து பணிபகிஷ்கரிப்பில் ஈடுபட்டுவர
புத்தளத்தில் இடம்பெற்ற வாகன விபத்து ஒன்றில் சிறுமி
நாவின்ன – மஹரகம பகுதியைச் சேர்ந்த 15 வயதான சிறுமியொரு
2030ஆம் ஆண்டுக்குள் இலங்கையில் ஒரு மன்னன் அவதரிப்பார் எ
வெளிநாட்டு கண்காணிப்பாளர்களின் பங்குபற்றலுடன் விசேட
கிழக்கு முனையை இந்தியாவிற்கு வழங்குவது தொடர்பாக பல்வ
பேராதனை போதனா வைத்தியசாலையில் பெண் ஒருவர் உயிரிழந்தம
எதிர்காலத்தில் கடுமையான போசாக்கின்மையை தடுக்கும் வக
பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனாவின் அழைப்பினை ஏற்று இரண
கொரோனா வைரஸினைக் கட்டுப்படுத்துவதற்கு ஏனைய நாடுகள் ப
பிரதமர் மஹிந்த ராஜபக்ஸவை தவிர்ந்த, அமைச்சரவையிலுள்ள அ
பயங்கரவாதத் தடைச்சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்ளவ
வைத்தியசாலைகளுக்காக முன்பதிவு செய்யப்பட்ட மருந்துகள
ஊடகவியலாளர் சுப்பிரமணியம் சுகிர்தராஜனின் 15 ஆம் ஆண்டு
