கடந்த வாரம் மின் உற்பத்தி நிலையங்களில் ஏற்பட்ட கோளாறு காரணமாக, நாடளாவிய ரீதியில் சில பகுதிகளில் மின் வெட்டு அமுல்படுத்தப்பட்டது.
அதனை மீளமைப்பதற்காக இரண்டு தடவைகளில் 3,000 மெற்றிக் டன் டீசல் வழங்கப்பட்டதுடன், இனி டொலர்கள் இன்றி அவ்வாறு எரிபொருளை வழங்க முடியாது என வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பில குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை மின்சார சபை டொலர்களை வழங்கினால், மசகு எண்ணெய்யை இறக்குமதி செய்து வழங்க முடியும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இலங்கை மின்சார சபைக்கு வழங்குவதற்கு தேவையான எரிபொருள் கையிருப்பில் இல்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
தற்போது கையிருப்பில் உள்ள எரிபொருளை மின் உற்பத்தி நிலையங்களுக்கு வழங்கினால், வாகனங்களுக்கான எரிபொருளுக்கு தட்டுப்பாடு ஏற்படும் என அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.
எரிபொருள் இல்லாவிட்டால் இரண்டு மணித்தியாலங்களுக்கு மின்சாரத்தை துண்டித்து நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவது சாத்தியமென்றும், வாகன சாரதிகளால் அவ்வாறான நடவடிக்கையை மேற்கொள்ள முடியாது என்றும் வலுசக்தி அமைச்சர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.
இவ்வாறான முடிவு எடுக்கப்படுமாக இருந்தால் மக்கள் பாரிய நெருக்கடிகளைச் சந்திக்க நேரிடும் என அரசியல் விமர்சகர்கள் குறிப்பிடுகின்றனர்.
பாடசாலைக்கு சாப்பிடாமல் பட்டினியில் செல்லும் மாணவர்
ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணியின் குருநாகல் மாவட்ட நாடாளு
மனித உரிமைகள் ஆணைக்குழு வெளியிட்டுள்ள நிபந்தனைகளை மீ
இலங்கை - இந்திய கடற்றொழிலாளர்களை மோதவிட்டு ராஜபக்ச
இலங்கையில் மூன்றாவது முறையாக முடக்கம் செய்வதற்கு எ
யாழ்ப்பாணத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக மூடப்பட
கொலை செய்து சடலத்தைக் கூரையில் தொங்க விடுவதாக மிரட்டல
100 நாட்கள் செயல்முனைவு மக்கள் குரல் மட்டக்களப்பு மாவட்
மட்டக்களப்பு நகரில் பிச்சைக்கார வேடம் பூண்டு துவிச்ச
யாழ். மாநகர சபையின் வரவுசெலவு திட்டம் 23 மேலதிக வாக்குக
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவும், அவரின் பாரி
அரசாங்கத்தினை பதவி விலகக் கோரி காலி முகத்திடலில் தொடர
இலங்கை வானொலி வர்த்தக சேவையின் சிரேஷ்ட அறிவிப்பாளர்க
எந்தவொரு அரசியல் கட்சிகளின் தலையீடின்றி கடந்த 9ஆம் தி
இலங்கையில் இருந்து இதுவரை நிதி உதவிகள் தொடர்பில் கோரி
