இலங்கை கடற்படையே மாதகல் மீனவரை கொலை செய்துள்ளது என தமிழ் தேசியக் கட்சியின் செயலாளர் நாயகம் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்திருந்தார் .
இன்று யாழ்ப்பாணம் மாதகல் கடற்பரப்பில் சடலமாக மீட்கப்பட்டவரின் தலையில் பலத்த காயம் காணப்படுவதுடன், அவர் பயணித்த படகின் வெளி இணைப்பு இயந்திரம் சேதமடைந்து காணப்படுகின்றது.
இதிலிருந்தே தெரிகிறது படகு வேண்டுமென்று மோதச் செய்யப்பட்டு அடாவடி படுகொலை நிகழ்துள்ளது என்று. இந்த அடாவடியை செய்தவர்கள் கடற்படையினர் என மக்கள் இங்கு அறிவித்துள்ளனர்.
மீனவர் ஒருவர் விபத்து மூலம் உயிரிழந்தால் 24 மணித்தியாலங்களின் பின்னரே சடலம் கரையொதுங்கும் ஆனால் உயிரிழந்தவரின் உடல் சூடு கூட தணியவில்லை என உறவுகள் தெரிவித்துள்ளனர்.
இது தவிர இன்னமும் நீதவான் சடலத்தை வந்து பார்வையிடவில்லை.பதில் நீதவானை அமர்த்திவிட்டு இங்கு வர முடியாத நிலையில் நீதித்துறை உள்ளது. எங்களை நாமே ஆளும் ஆட்சி முறை வேண்டும்.
இந்த கொலையில் யாரும் சாட்சி சொல்ல மாட்டார்கள். ஏனென்றால் சாட்சி சொல்பவர்களும் கொலை செய்யப்படலாம் என்ற அச்சம் காணப்படுகிறது என தெரிவித்துள்ளார்.
இதேவேளை, நேற்றைய தினம் இரவு மீன்பிடிக்கச்சென்ற மாதகல் பகுதி மீனவர் ஒருவர் (எட்வேட் மரியசீலன் -வயது 31) இன்று காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
இலங்கையில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்
வவுனியாவில் கொவிட் தொற்று காரணமாக இருவர் மரணமடைந்துள
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிராக ஜப்பானில் போ
கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையில் தோற்று
யாழ்ப்பாணம் – நெடுந்தீவு கடற்பரப்பில் கடந்த பெப்ரவர
அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலொன்று வெளியிடப்பட்டுள்
'நாங்கள் ஒன்று சேர்ந்து நாட்டைக் கட்டியெழுப்புவோம்
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ சற்றுமுன்னர் நாடாளுமன்றத்
மாத்தறை - பிலதுவ பிரதேசத்தில் நேற்று கிராமத்திற்குள்
தமிழ்த்தேசம் இழந்துபோன ஜனநாயகத்தையும், இறந்துபோன சம உ
பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு தீபாவளி முற்பணமாக 15 ஆ
கொவிட் தொற்றைக் கட்டுப்படுத்த ரஷ்யா மற்றும் சீனா ஆகிய
வவுனியாவில் ச.ட்டவிரோத து.ப்பாக்கியுடன் நபரொருவர் விச
ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பில் சமர்ப்ப
ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் 48 ஆவது கூட்டத் தொட
