குருவிட்ட, கந்தலந்த பிரதேசத்தில் மனைவி கோடரியால் தாக்கியதில் கணவன் பலி!
மனைவி கோடரியால் தாக்கியதில் ஆபத்தான நிலையில் இரத்தினபுரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
மேலும் குருவிட்ட, கந்தலந்த பிரதேசத்தில் நேற்று (08) இரவு குறித்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றிருந்த நிலையில், படுகாயமடைந்த நபர் சிகிச்சை பலனின்றி இன்று (09) காலை உயிரிழந்துள்ளார்.
இதனையடுத்து உயிரிழந்தவர் கந்தலந்த குருவிட்ட பகுதியைச் சேர்ந்த 34 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
உயிரிழந்த நபர் குடிபோதையில் தனது மனைவியை தினமும் தாக்குதவாகவும், அந்த சந்தர்ப்பங்களில் மனைவி மற்றும் குழந்தைகள் அயல் வீட்டில் தஞ்சமடைவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
நேற்று இரவும் குடிபோதையில் கூரிய ஆயுதம் மற்றும் அமிலத்துடன் வீட்டுக்கு வந்த கணவன் மனைவிக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.
இன்னிலையில் கோடரி ஒன்றினால் கணவனை மனைவி தாக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட கோடரியுடன் 31 வயதான பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.
குருவிட்ட பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
கிளிநொச்சி மாவட்டத்தின் 7ஆவது பொலிஸ் நிலையம் இன்று உத
மட்டக்களப்பு வாழைச்சேனை பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன
நீதிமன்றை அவமதித்த குற்றச்சாட்டில் 4 வருட கடூழிய சிறை
அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் வாரத்திற்கு ஒரு மு
வடக்கு மாகாணத்தில் மருத்துவர்கள், தாதியர்கள் உட்பட்ட
எதிர்வரும் வாரம் முதல் 5000 ரூபாய் கொடுப்பனவை மீண்டும் வ
கட்டுநாயக்க விமான நிலையத்தின் பொருட்கள் ஏற்றுமதி மு
பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதற்கு இலங்கை மத்திய வங
இலங்கை சுதந்திரம் பெறுவதற்கு முன்னர் இருந்தே தேர்த ல்
இலங்கையில் இன்று (27) தங்கத்தின் விலை குறைந்துள்ளதாக கொ
திருமதி இலங்கை அழகி பட்டம் வென்ற புஷ்பிகா டி சில்வா, தம
இலங்கையில், சர்ச்சைக்குரிய பயங்கரவாத தடுப்பு சட்டத்த
துண்டுப்பிரசுரம் ஒன்றில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரி
இலங்கையில் நாளாந்தம் பதிவாகும் கொரோனா வைரஸ் தொற்றாளர
