சமூகவலைதளமான வாட்ஸ்-அப் பல்வேறு விதி முறைகளை தொழில் நுட்ப விதிப்படி வகுத்துள்ளது. கடந்த மே மாதத்தில் புதிய தொழில்நுட்ப விதிகள் நடைமுறைக்கு வந்தன.
இந்த விதிமுறைகளை மீறும் வாடிக்கையாளர்கள் கணக்குகளை அந்த நிறுவனம் தடை செய்து வருகிறது.
இந்தநிலையில் நவம்பர் மாதத்தில் தொழில் நுட்ப விதிகளின்படி 17.59 லட்சம் இந்தியர்களின் கணக்குகளுக்கு வாட்ஸ்-அப் தடை விதித்துள்ளது. இது தொடர்பாக வாட்ஸ்- அப் நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் கூறியதாவது:-
தொழில்நுட்ப விதிப்படி கடந்த ஆண்டின் நவம்பர் மாதத்திற்கான எங்களது 6-வது மாதாந்திர அறிக்கையை வெளியிட்டுள்ளோம். பயனாளிகளின் பாதுகாப்பு அறிக்கையில் பெறப்பட்ட புகார்கள் மற்றும் நடவடிக்கைகள் பற்றிய விவரங்கள் அதில் உள்ளன.
நவம்பர் மாதத்தில் 17.59 லட்சம் இந்தியர்களின் வாட்ஸ்-அப் கணக்குகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. எங்களுக்கு வரப்பட்ட 602 புகார்களின் அடிப்படையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
துஷ்பிரயோகத்தை தடுப்பதில் வாட்ஸ்-அப் நிறுவனம் முன்னணியில் உள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது
ஜல்லிக்கட்டு போட்டியில் வாடிவாசலில் சீறி பாய திருச்ச
முன்னாள் முதலமைச்சர் கலைஞர் மு.
இந்தியாவில் தயாரிக்கப்பட்ட தடுப்பூசியானது, சுயசார்ப பிரதமர் நரேந்திர மோடி கடந்த 2014-ம் ஆண்டு மத்தியில் பிரதம மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் , அரசுமுறைப் பயண உத்தரபிரதேசத்தில் பண்டா மாவட்டத்தின் பபேரு கிராமத்த தமிழகத்தில் அதிகரித்து வரும் ஒமைக்ரான் பரவலைக் கட்டு ஆறு வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த காங்கிரஸ் முன்னாள் தலைவரும், வயநாடு தொகுதி எம்.பி.யுமா தமிழக சட்டமன்ற வரும் ஏப்ரல் 6ஆம் தேதி நடைபெற உள்ளது தேர
