மதுரையில் இன்று முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ நிருபர்களிடம் கூறியதாவது:-
கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையில் அ.தி.மு.க. அரசு செய்தது போல தி.மு.க. அரசும் செயல்பட வேண்டும்.
மு.க.ஸ்டாலின் முதல்-அமைச்சராக சுறு சுறுப்பாக பணியாற்றுகிறார். அவரோடு சேர்ந்து அனைவரும் பணியாற்றி கொரோனா பரவலை குறைக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளவேண்டும்.
தி.மு.க. எதிர்கட்சியாக இருந்தபோது அளித்த வாக்குறுதியான குடும்ப அட்டைதாரர்களுக்கு 5 ஆயிரம் ரூபாய் என்பதை வழங்க வேண்டும்.
ஒமைக்ரான் பரவல் அதிகரிப்பால் தமிழகத்தில் மற்றொரு ஊரடங்கு வருமோ? என்ற அச்சத்தில் மக்கள் உள்ளனர்.
ஆளும் கட்சி, எதிர்கட்சி என எந்த நிலையில் இருந்தாலும் அ.தி.மு.க. மக்களின் நலனுக்காக போராடும்.
வரலாற்றில் இதுவரை எந்தவொரு பிரதமரும் பேசாத வகையில் தமிழ் கலாசாரத்தையும், பெருமையையும் பற்றி பேசி வருபவர் மோடி, உலகெங்கும் தமிழர்களின் கலாசார பெருமையை பறைசாற்றி வருகிறார். திருக்குறள், புறநானூறு, ஆகியவற்றை ஐ.நா சபை வரை எடுத்து சென்று பேசி வருகிறார் பிரதமர் மோடி.
பிரதமர் மோடி மதுரை வருகை என்பது தமிழக மக்களுக்கு மகிழ்ச்சியை தரக்கூடியது. மதுரை வரும் பிரதமரை தமிழக மக்கள் வாழ்த்தி வரவேற்க வேண்டும்.
தி.மு.க. எதிர்கட்சியாக இருந்தபோது மோடியை எதிர்த்துவிட்டு தற்போது வரவேற்பு அளிப்பதில் இருந்தே தி.மு.க.வின் நிலைப்பாடு என்னவென்று மக்களுக்கு புரியும்.
இவ்வாறு அவர் கூறினார்
பேரறிவாளன் உள்பட 7 பேர் விடுதலை விவகாரத்தில் முடிவு எட
டெல்லியில் ரேசன் பொருட்களை வீடுகளுக்கே சென்று வழங்கு
கேரளாவில் கம்யூனிஸ்டு கூட்டணி, காங்கிரஸ் கூட்டணி இடைய
சென்னை ரைஃபிள் கிளப் நடத்திய 46- வது மாநில அளவிலான துப்ப
கேரளாவில் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா நடத்திய முழு
திமுகவின் பெரும்புள்ளியான எ.வ. வேலுவின் வீடுகள், அறக்க
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை உயர்ந்து வருகி
இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவர் நல்லக்கண்ண
ஸ்ரீராமஜென்ம பூமி தீர்த்த ஷேத்திர அறக்கட்டளையின் மது
தேசிய கல்விக்கொள்கையில் 2019-ம் ஆண்டு பல்வேறு திருத்தங்