பாகிஸ்தானின் மத்திய குவெட்டா பகுதியில் வியாழக்கிழமை நிகழ்ந்த குண்டுவெடிப்பில் 4 பேர் உயிரிழந்தனர். மேலும் 15 பேர் காயமடைந்தனர்.
குவெட்டாவின் முக்கியப் பாதைகளில் ஒன்று ஜின்னா சாலை. இங்குள்ள அறிவியல் கல்லூரி அருகே நிறுத்தப்பட்டிருந்த காரின் அருகே வெடிகுண்டு மறைத்து வைக்கப்பட்டிருந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். எந்த வகையை சேர்ந்த வெடிகுண்டு அது என்பது குறித்து
அதிகாரிகள் மதிப்பீடு செய்து வருகின்றனர்.
இறந்தவர்கள் உடல்கள் மற்றும் காயமடைந்தவர்கள் குவெட்டா பொது மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். வெடி குண்டு வெடித்து சிதறிய பகுதியின் அருகிலுள்ள கட்டிடங்களின் கண்ணாடிகள் உடைந்திருந்தன. காயமடைந்தவர்களில் பெரும்பாலோர் கண்ணாடி துண்டுகள் மற்றும் ஆணி காயங்களால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
நடப்பாண்டு ஏப்ரலில் குவெட்டா நகரில் நிகழ்த்தப்பட்ட சக்திவாய்ந்த வெடிகுண்டு தாக்குதலில் ஐந்து பேர் உயிரிழந்தனர். 12 பேர் காயமடைந்தனர். ஆகஸ்ட் 15 ஆம் தேதி ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றிய பின்னர், பாகிஸ்தான் எல்லைப்பகுதி மாகாணங்களில் வெடிகுண்டு தாக்குதல்கள் அதிகரித்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
குவெட்டா நகரில் செயல்பட்டு வரும் பாகிஸ்தான் தலிபான் இயக்கம் குண்டுவெடிப்பை நிகழ்த்தியிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.
போரில் உயிரிழந்த ரஷ்ய படையினரின் சடலங்கள் பெலாராஸ் நா
சீனாவின் வுகான் நகரில் வெளிப்பட்ட கொரோனா வைரஸ் உலக நா
உக்ரைனுக்கு ஆதரவாக போரில் கலந்து கொல்வதற்காக ராணுவத்
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்துள்ளது. இ
இன்று (2) முதல் மார்ச் 7ம் திகதி வரை கடுமையான நிலநடுக்கம்
தெற்கு ஒக்ஸ்போர்ட்ஷையரில் ஆயிரக்கணக்கான புதிய வீடுக
கொரோனாவின் முதல் அலையில் மிகவும் பாதிக்கப்பட்ட நாடுக
நீண்ட தேர்தல் நடைமுறைதான் மேற்கு வங்காள கிராமப்புற பக
பிரபல ஹாலிவுட் நடிகர் லியானர்டோ டிகாப்ரியோ உக்ரைனுக்
அவுஸ்திரேலியாவில் தமிழ்நாட்டைச் சேர்ந்த முகமது ரகமத
கிழக்கு ஆப்பிரிக்க நாடான உகாண்டாவில் எபோலா நோய்த்தொற
உலகளாவிய கொரோனா தடுப்பூசி வினியோகத்தில் தொடர்ந்து மந
புதின் தனது நீண்ட காலத் தோழியான அலினா கபாவே என்ற பெண
ஆப்கானிஸ்தானில் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றிய
