இஸ்ரேலில் தற்போது 20,000 க்கும் மேற்பட்ட கொரோனா நோயாளிகள் உள்ளனர், இதில் 94 பேர் தீவிர நோய் பாதிப்புக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா தொற்று பரவ தொடங்கியதில் இருந்து இதுவரை இஸ்ரேலில் 8,243 பேர் இறந்துள்ளனர். இந்நிலையில், இஸ்ரேல் சுகாதாரத்துறை அமைச்சகத்தின் இயக்குநர் ஜெனரல் நாச்மன் ஆஷ் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது:
கொரோனா நோயால் அதிகம் பாதிக்கப்படக்கூடிய மக்களுக்கான நான்காவது தடுப்பூசியை இஸ்ரேல் அங்கீகரித்துள்ளது. தொற்று நோய் பரவல் குறித்த ஆய்வுகளின் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
சூழலுக்கு ஏற்றவாறு நான்காவது பூஸ்டர் டோஸை பொதுமக்களுக்கு வழங்குவது குறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் முடிவு செய்வார்கள். ஒரு வருடத்திற்கு முன்பு ஃபைசர் கொரோனா தடுப்பூசியை பயன்படுத்த தொடங்கிய முதல் வரிசை நாடுகளில் இஸ்ரேலும் இருந்தது.
கடந்த கோடை காலம் முதல் பூஸ்டர் டோஸ் தடுப்பூசிகளை இலவசமாக வழங்கத் தொடங்கியது. இவ்வாறு அவர் தெரிவித்தார். முன்னதாக கொரோனா வைரஸ் பாதிப்புகளை தடுக்கும் மாத்திரைகளை ஏற்றுமதி செய்யும் நடவடிக்கையை இஸ்ரேல் வியாழன் முதல் தொடங்கி உள்ளது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்காவின் ஜார்ஜியா மாகாணம் கெயின்ஸ்வில்லே நகரில
ஜேம்ஸ் பாண்ட் பட ஹீரோ டேனியல் கிரேக்கிற்கு, இங்கிலாந்
இங்கிலாந்து இந்தியாவின் நெருங்கிய வர்த்தக கூட்டாளிய
15 நாட்களுக்குள் உக்ரைன் முழுவதையும் கைப்பற்ற ரஷியா
உலகம் முழுவதும் 43 நிமிட முடக்கத்துக்கு பிறகு வாட்ஸ் அப
உலகளவில் கொரோனாத் தொற்றினால் அதிகளவில் பாதிக்கப்ப
இரண்டு நாட்களாக ரஷ்ய தாக்குதலுக்கு உள்ளான உக்ரைனுக்க
அமெரிக்காவின் கலிபோர்னியாவில் நேற்று முன்தினம் காலை 9
மெக்சிகோ சிட்டி: மெக்சிகோவில் ஒரே நாள் இரவில் மழையும்,
ரஷ்யா போர்க்கப்பலை உக்ரைன் படைகள் குண்டு போட்டு தகர
தெற்கு உக்ரைனில் இருந்து சபோரிஜியா வரையுள்ள பகுதிகளி
உக்ரைன் - ரஷ்யா மத்தியிலான போர் மீண்டும் சூடுபிடித்து
நவீன போர் விமானமான ரபேல் ஜெட் விமானத்தை கொள்முதல் செய
அமெரிக்க ஏர்லைன்ஸ் விமானத்தில் திடீரென பயணி ஒருவர் வி
