மெட்ராஸ், கபாலி, காலா போன்ற படங்களை இயக்கிய இயக்குனர் பா.ரஞ்சித், தயாரிப்பிலும் கவனம் செலுத்தி வருகிறார். அவர் தயாரித்த பரியேறும் பெருமாள், இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு போன்ற படங்கள் பெரிய வரவேற்பை பெற்றது. சமீபத்தில் அவர் தயாரித்த ரைட்டர் திரைப்படம், தியேட்டரில் வெளியாகி விமர்சன ரீதியாக பலரது பாராட்டுகளைப் பெற்று வருகிறது.
காவல்துறை அதிகாரியாக சமுத்திரக்கனி நடித்துள்ள ரைட்டர் படத்தில் சமுத்திரக்கனியுடன் இணைந்து திலீபன், இனியா, ஹரிகிருஷ்ணன், சுப்பிரமணியம் சிவா, மகேஸ்வரி, லிஸ்ஸி ஆண்டனி ஆகியோர் நடித்துள்ளனர். பிரதீப் காளிராஜ் ஒளிப்பதிவு செய்து கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ளார்.
இந்த படத்தை, இயக்குனர் பிராங்கிளின் ஜேக்கப் இயக்கி நல்ல பாராட்டுக்களை பெற்றார். இதன் வெற்றியை தொடர்ந்து அவருக்கு அடுத்த படத்தை இயக்க வாய்ப்பு வந்துள்ளது. விஜய் நடிப்பில் வெளிவந்த மாஸ்டர் திரைப்படத்தின் இணை தயாரிப்பாளரும் கோப்ரா, மகான், காத்துவாக்குல ரெண்டு காதல் படங்களின் தயாரிப்பாளருமான லலித்குமாரின் செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் அடுத்த படத்தை இயக்குனர் பிராங்கிளின் ஜேக்கப் இயக்குகிறார் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் அடுத்தடுத்த அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழில் தோனி, கபாலி, ஆல் இன் ஆல் அழகுராஜா உள்ளிட்ட படங்
நயன்தாரா, விக்கி திருமணம்- ஷாருக்கான், ரஜினி, டிடி என தி
வலது காலில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ள கமல்ஹாசன்
சன் டிவியில் குழந்தைகளை மட்டுமல்லாமல் பெரியவர்களையு
தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழி
தமிழில் முன்னணி நடிகராக இருக்கும் சூர்யா, நடிப்பதோடு
தமிழில் ஒரு சில படங்களில் நடித்துள்ள நடிகை மீரா மிதுன
தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் ம
பொதுவாகவே பெண்களுக்கு நகைகள் மீது அதிகம் ஈர்ப்பு இருக
பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியை தொடர்ந்து ஹாட்ஸ்டாரில் 24
விறுவிறுப்புக்கும், சண்டைக்கும் பஞ்சமில்லாமல் பிக் ப
