முல்லைத்தீவு மாவட்டத்தின் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் முல்லைத்தீவில் இன்று (30) கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது .
கொவிட் – 19 சுகாதார வழிகாட்டல்களை பின்பற்றி இந்த கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது .
கடந்த 2017 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 8 ஆம் திகதி ஆரம்பித்த தொடர் கவனயீர்ப்பு போராட்டம் இன்று 1757 ஆவது நாளாக தொடர்ந்து இடம்பெற்று வருகின்ற நிலையில் இன்றைய தினம் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் போராட்டம் இடம்பெறும் கொட்டகைக்கு முன்பாக கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் எங்கே எங்கே உறவுகள் எங்கே, , குற்றவாளிகளை சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் நிறுத்து, வேண்டும் நீதி வேண்டும், சர்வதேசமே பதில் சொல், மரண சான்றிதழும் வேண்டாம் நட்டஈடும் வேண்டாம் என்ற பல்வேறு கோஷங்களை எழுப்பியவாறும் பல்வேறு வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளை தங்கியவாறும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டம் இடம்பெறும் இடத்துக்கு அண்மையாக 15 க்கும் மேற்பட்ட புலனாய்வாளர்கள் பிரசன்னமாகியிருந்ததோடு போராட்டத்தில் ஈடுபட்டவர்களை புகைப்படம் எடுத்து கண்காணிக்கும் செயற்பாட்டிலும் ஈடுபட்டனர் .
இலங்கையில் திரிபோஷ
கடந்த 2021ஆம் ஆண்டு 23 சதவீதத்தினால் திடீரென நாட்டின் ஏ
பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள்வதற்கு சர்வதேச ந
முல்லைத்தீவு- முள்ளியவளை பகுதியில் அமைந்துள்ள தேசிய ப
2021 ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் (உ/த) பரீட்சை இன்று காலை 8.30 ம
வவுனியாவில் கொரோனா தொற்றினால் இதுவரை உயிரிழந்தவர்கள
அவுஸ்திரேலியாவில் நீரில் மூழ்கி இலங்கை பொறியியலாளர்
நாடாளுமன்றத்தை கலைக்கும் வகையில் விரைவில் நம்பிக்
இன்று காலை 8.30 மணி முதல் மாலை 5.30 மணி வரையான காலப்பகுதிக்க
உணவுப் பாதுகாப்பு மற்றும் ஊட்டச்சத்தை உறுதி செய்வதற்
இரத்த இருப்பு குறைவடைந்து வருவதால் இரத்த தானம் செய்ய
உலகில் பெண்களின் உரிமைகளுக்காக ஒரு தினம் கொண்டாடப் பட
லங்கா IOC நிறுவனம் இன்று நள்ளிரவு முதல் எரிபொருள் விலைய
இலங்கையில் சீனாவின் பிரசன்னத்தை கட்டுப்படுத்தும் நோ
