தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளராக இருப்பவர் டி.இமான். இவர் இசையில் ரஜினி நடித்த அண்ணாத்த திரைப்படம் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் பல படங்களுக்கு இமான் இசையமைத்து வருகிறார். இந்நிலையில், தனது மனைவி மோனிகாவை பிரிந்து விட்டதாக அறிவித்து இருக்கிறார்.
மோனிகா என்பவரை இமான் 2008-ம் ஆனது திருமணம் செய்து கொண்டார். இருவரும் கடந்த ஆண்டு நவம்பர் மாதமே விவாகரத்து செய்ததாக கூறப்படுகிறது. ஆனால், இமான் தற்போது தான் அதிகாரப்பூர்வமாக தனது சமூக வலைத்தள பக்கத்தில் அறிவித்து இருக்கிறார்.
இதுகுறித்து தனது சமூக வலைத்தள பக்கத்தில், ‘எனது நலம் விரும்பிகள் மற்றும் தீவிர இசை ஆர்வலர்கள் அனைவரும் எனக்கு உறுதுணையாக இருந்ததற்காக நான் உண்மையிலேயே நன்றியுள்ளவனாக இருக்கிறேன்.
எங்களின் வாழ்க்கை வெவ்வேறு பாதைகளில் செல்லவே, மோனிகா ரிச்சர்டும் நானும் நவம்பர் 2020 முதல் பரஸ்பர சம்மதத்துடன் சட்டப்பூர்வமாக விவாகரத்து செய்து, இனி கணவன் மனைவியாக இருக்க முடியாது என்று முடிவெடுத்தோம்.
எங்கள் நலம் விரும்பிகள், இசை ஆர்வலர்கள் மற்றும் ஊடகங்கள் அனைவரையும் எங்களின் தனியுரிமைக்கு மதிப்பளிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். உங்கள் புரிதலுக்கும், அன்புக்கும், ஆதரவுக்கும் மிக்க நன்றி" என்று பதிவு செய்திருக்கிறார்.

சிவா கார்த்திகேயன் மற்றும் விமல் நடிப்பில் வெளியான கே
அஜித் - எச்.வினோத் கூட்டணியில் தற்போது வலிமை படம் உருவா
சிம்பு நடிப்பில் வெளியான ”போடா போடி” படத்தின் மூலம
கோலிவுட்டில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சிவகார்த்த
இயக்குனர் அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் கதாநாயகனாக நட
வலிமை வெற்றியை தொடர்ந்து AK 61
நடிகர் அஜித் தமிழ் சினி
சிபிராஜ் நடிப்பில் உருவாகியுள்ள ‘மாயோன்’ ப
தமிழ் திரையுலகில் முன்னணி இசையமைப்பாளராக வலம் வரும் ஜ
பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி சிம்பு தொகுப்பாளராக களம
கொரோனா பாதிப்பின் காரணமாக நகைச்சுவை நடிகர் பாண்டு மற்
தமிழ் சினிமாவின் மாபெரும் உச்ச நட்சத்திரம் நடிகர் விஜ
பாகுபலி படத்தின் பிரம்மாண்ட வெற்றியை தொடர்ந்து ராஜமவ
தமிழ் சினிமாவில் தனக்கென தனி இடத்தை பிடித்தவர் தான் ப
நடிகை மீரா மிதுன், பட்டியலினத்தவர் குறித்து அவதூறாக ப
பாலிவுட் நடிகை ஹுமா குரேஷியின் லேட்டஸ்ட் க்ளிக்ஸ்.. அழ
