துறைமுகத்தில் சிக்கியுள்ள அத்தியாவசிய பொருட்களை விடுவிப்பதற்கு தேவையான நிதியை வழங்க வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன இணங்கியுள்ளதாக அத்தியாவசிய பொருட்கள் இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
அரிசி, பருப்பு, சீனி, உருளைக்கிழங்கு, பெரிய வெங்காயம் உள்ளிட்ட அத்தியாவசிய உணவுப் பொருட்கள் பொதி செய்யப்பட்ட கொள்கலன்கள் துறைமுகத்தில் தேங்கிக் கிடப்பதாகவும், விரைவில் டொலர் வழங்கப்பட்டால் பொருட்களை விடுவிக்க முடியும் எனவும் தொழிற்சங்கப் பிரதிநிதிகள் அமைச்சரிடம் தெரிவித்துள்ளனர்.
தேவையான நிதியை பெற்றுக்கொள்வது தொடர்பில் அமைச்சர் பந்துல குணவர்தன மத்திய வங்கி ஆளுநருடன் கலந்துரையாடியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் 25 மில்லியன் டொலர்களை விடுவிக்க இணங்கியுள்ளதாக அத்தியாவசிய உணவு இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இதற்கான பணம் வழங்கும் பணி இன்று முதல் நடைபெற உள்ளது.
நாணய மாற்று விகிதக் கொள்கையில் எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை என மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 916 பேர் பூரணம
திருகோணமலை – குச்சவெளி – மதுரங்குடா பகுதியில் ஆண் ஒ
எதிர்வரும் ஐந்து வருடங்களுக்கும் தற்போதைய அரசாங்கமே
இலங்கையில் இருந்து வெளிநாடுகளுக்கு கொண்டு செல்லப்பட
வடக்கு மாகாணத்தில் மேலும் 4 பேருக்கு கொரோனா வைரஸ் த
தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் பிறந்த
ஹுங்கம கடற்பரப்பில் ரஷ்ய பிரஜை ஒருவர் நீரில் மூழ்கி உ
இலங்கை சந்தையில் கோழி இறைச்சி மற்றும் முட்டையின் விலை
பேராதனை பல்கலைக்கழகத்தின் பொறியியல் பீடத்தின் இறுதி
யாழ்.பருத்துறை துன்னாலை - குடவத்தை பகுதியில் உள்ள கோ
நுரைச்சோலை மின் உற்பத்தி நடவடிக்கைகள் மீள ஆரம்பிக்கப
வவுனியா, புளியங்குளம், புதுவிளாங்குளம் காட்டுப் பகுதி
நுவரெலியா, ஹோர்டன் சமவெளி வீதியில் பட்டிப்பொல பிரதேசத
இலங்கையில் பணத்தை அச்சிடும் நடவடிக்கை காரணமாக டொலர் ந
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவின் வி