இலங்கை கடற்படையினரால் யாழ்ப்பாணத்தில் உள்ள இளைஞர்கள் குழுவிற்கு உயிர்காப்பு பயிற்சிப் பாடநெறி அண்மையில் வழங்கப்பட்டது.
யாழ்ப்பாணம், காரைநகரில் அமைந்துள்ள எலார கடற்படை முகாமில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 16 இளைஞர்கள் அடங்கிய குழுவொன்று கலந்துகொண்டதாக கடற்படை தகவல்கள் தெரிவிக்கின்றன.
3 வார கால உயிர்காப்பு பயிற்சியில் கலந்துகொண்டு பாடநெறியை வெற்றிகரமாக பூர்த்தி செய்தவர்களுக்கான சான்றிதழ்களை வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா மற்றும் வடக்கு கடற்படை கட்டளைத் தளபதி ரியர் அட்மிரல் பிரியந்த பெரேரா ஆகியோர் வழங்கி வைத்தனர்.
கடற்படை சமூகப் பொறுப்புணர்வு முயற்சியின் ஒரு பகுதியாக, கடற்படையின் வடக்கு கடற்படைக் கட்டளையகம் 2021/01 மற்றும் 2021/02 ஆம் ஆண்டுக்கான லைஃப் வெண்கலப் பதக்கப் பயிற்சியை நடத்தியது.
இதனையடுத்து,கடற்படையின் விரைவு மீட்பு மற்றும் நிவாரணப் பிரிவின் உதவியுடன் இலங்கையின் உயிர்காப்பு மற்றும் நார்த்விண்ட் திட்டங்களுடன் இணைந்து கடற்படை இந்த உயிர்காப்பு பாடத்திட்டத்தை ஏற்பாடு செய்தது.
மேலும் பாடநெறியை வெற்றிகரமாக பூர்த்தி செய்தவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் இந்த நிகழ்வு, சுகாதார வழிகாட்டுதலுக்கமைய இடம்பெற்றதாக கடற்படை மேலும் தெரிவித்துள்ளது.
இலங்கையில் இன்றைய தினம் பல்வேறு இடங்களில் அரசாங்கத்த
மின் வெட்டு வேளையில் அச்சுவேலி மத்திய கல்லூரி அலுவலகம
இலங்கையின் அபிவிருத்தி மறுசீரமைப்பு வேலைத்திட்டத்தி
எரிபொருள் விலை சூத்திரத்தின் அடிப்படையில் இலங்கையின
இலங்கை 5 இலட்சம் அஸ்ட்ராஜெனெகா கொவிட்-19 தடுப்பூசிகளை இ
யாழ்ப்பாணம் அரசடி பகுதியில் ஊசி மூலம் ஹெரோரோயின் போதை
இலங்கையில் பொருளாதார நெருக்கடியில் இருந்து மக்களை மீ
விடுதலைப்புலிகளுடனான போரில் பழிவாங்கும் உணர்வு இருந
அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபா வலுவடைந்து வந்த
சட்டமா அதிபர் திணைக்களத்தில் புதிதாகத் திறந்து வைக்க
இலங்கைக்கு இன்றையதினம் (29-05-2022) டீசல் அடங்கிய கப்பல் ஒன்ற
நேற்றைய தினம் காவல்துறையினரால் முன்னெடுக்கப்பட்ட தி
நாட்டில் மேலும் 3 மாவட்டங்களைச் சேர்ந்த சில கிராம சேகவ
ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பில் சமர்ப்ப
மக்கள் எதிர்ப்பு காரணமாக மகிந்த ராஜபக்ச கடந்த 9 ஆம் த