தோட்ட நிர்வாகம் மற்றும் கம்பனிகளுக்கு எதிராகவும், தொழிலாளர்களின் உரிமைகளை பாதுகாக்க கூட்டு ஒப்பந்தம் மீண்டும் வேண்டும் எனவும் வலியுறுத்தி, தோட்டத் தொழிலாளர்களால் லிந்துலை நகரில் இன்று (12) முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தில் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பிரதிநிதிகளும் பங்கேற்று, கூட்டு ஒப்பந்தத்துக்காக குரல் எழுப்பினர்.
இதனையடுத்து, லிந்துலை நகரில் நடைபெற்ற இப்போராட்டத்தில் டயகம, தலவாக்கலை, கொட்டகலை, லிந்துலை மற்றும் ஏனைய சில தோட்டங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள் பங்கேற்றிருந்தனர்.
இதேநேரம், இ.தொ.காவின் பிரதித் தலைவர் அனுஷியா சிவராஜா, முன்னாள் மாகாணசபை உறுப்பினர் சக்திவேல், கொட்டகலை, தலவாக்கலை பிரதேச சபைகளை சேர்ந்த உறுப்பினர்கள் உட்பட இ.தொ.காவின் பிரதிநிதிகளும் இப்போராட்டத்தில் பங்கேற்று, தொழிலாளர்களுக்கு ஆதரவு தெரிவித்தனர்.
இப்போராட்டத்தில் பங்கேற்ற மக்கள், தோட்ட நிர்வாகம் மற்றும் பெருந்தோட்ட நிறுவனங்களின் கெடுபிடிகளை கண்டித்துடன், தமது உரிய வகையில் சம்பள கொடுப்பனவு வழங்கப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தினர்.
" கொழுந்தின் அளவு அதிகரிக்கப்பட்டுள்ளது. அரை நாள் பெயர்தான் விழுகின்றது. ஆயிரம் ரூபா கிடைத்தும் பயன் இல்லை. " என தொழிலாளர்கள் தமது உள்ளக்குமுறல்களை வெளிப்படுத்தினர்.
மேலும் கூட்டு ஒப்பந்தம் இல்லாததால்தான் தமக்கு இந்நிலைமை ஏற்பட்டுள்ளது என சுட்டிக்காட்டிய மக்கள், அந்த ஒப்பந்தம் மீண்டும் வேண்டும் எனவும் வலியுறுத்தினர்.
தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்தில் மரக் கறிகளின்
சர்வதேச நாணய நிதியத்தின் ஆதரவு எதிர்வரும் செப்டெம்பர
மட்டக்களப்பு வாழைச்சேனை காவல்துறை பிரிவிலுள்ள கறுவங
யாழ்ப்பாணம் – கோண்டாவில் பகுதியில் புகையிரத்துடன் ம
காணாமல் ஆக்கப்பட்டோருக்குத் தீர்வு கிடைக்கும் என எமத
தொடரும் பொருளாதார நெருக்கடியால் மேலும் 6 இலங்கை தமி
அரசியல் கைதிகளுடைய விடுதலை அரசியல் தீர்வோடு மட்டும
மூத்த சட்டத்தரணி கனகரட்ணம் கேசவன் நேற்று பிற்பகல் கால
எல்லை தாண்டி மீன் பிடித்த எட்டு இந்திய மீனவர்கள் இலங்
யாழ். நெல்லியடி பகுதியில் வேகக் கட்டுப்பாட்டையிழந்த க
நச்சுத்தன்மை வாய்ந்த திரிபோஷா கையிருப்பு தொடர்பாக பொ
கொழும்பு - பம்பலப்பிட்டி பகுதியில் தொடர்மாடி குடியிரு
இலங்கையில் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 72 ஆயிரத்தைக
சாவகச்சேரியில் சற்று முன்னர் இடம்பெற்ற விபத்தில் ஒரு
மகாத்மா காந்தியின் 153 வது பிறந்த நாள் கொண்டாட்ட நிகழ்வ